tamilnadu

img

தஞ்சையில் கலைப் பேரணியுடன் துவங்கியது தமுஎகச மாநில மாநாடு!

தஞ்சையில் கலைப் பேரணியுடன் துவங்கியது தமுஎகச மாநில மாநாடு!

தஞ்சாவூர், டிச. 4 -  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 16-ஆவது மாநில மாநாடு, தஞ்சாவூரில் வியாழக்கிழமை (டிச.4) அன்று துவங்கி, ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. முதல் நாளான டிசம்பர் 4 அன்று மாலை 5 மணிக்கு, கவிஞர் தமிழ் ஒளியின் தோழரான தொல்காப்பிய அறிஞர் பாவலர் பாலசுந்தரம் இல்லத்திலிருந்து கலைப் பேரணி துவங்கியது. இந்தப் பேரணியை சதிராட்டக் கலைஞர் ரா. முத்து கண்ணம்மாள் துவக்கி வைத்தார். கி. அன்பரசன் ஒருங்கிணைத்தார்.  “வெறுப்பின் கொற்றம் வீழ்க, அன்பே அறமென எழுக’’ என்ற முழக்கங்களுடன் நடைபெற்ற பேரணியில், தமுஎகச மாநிலத்  தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்  செயலாளர் ஆதவன் தீட்சண்யா, வரவேற்புக்குழு செயலாளரும், தமுஎகச மாநிலத் துணைப் பொதுச் செயலாளருமான களப்பிரன் உள்ளிட்ட எழுத்தாளர்கள் மற்றும் கலை உலக ஆளுமை கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பேரணியில், தஞ்சை வீரசோழன் பறையாட்டக் குழு, தஞ்சை தேன்மொழி ராஜேந்திரன் கலைக்குழு, புதுகை பூபாளம் கலைக்குழு, கைலாய வாத்தியம் தமுஎகச பாடகர்களின் சேர்ந்திசை உள்ளிட்ட கலைநிகழ்வுகள் அணிவகுத்தன.  இந்தப் பேரணி அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா கட்டடம் முன்பு நிறைவடைந்தது.