திசை தெரியாத, மக்கள் விரோத பட்ஜெட்டுக்கு எதிராக பிப்.12-இல் தேசம் அதிரட்டும்! மக்கள் பிரச்சனைகளில் கள்ள மவுனம்
ஒட்டு மொத்த தேசத்தையும் திசை தெரியாத பொருளாதார புதைகுழிக்குள் தள்ளும் ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டை அம்பலப்படுத்தி இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) பொதுச் செயலாளர் எளமரம் கரீம் விடுத்துள்ள விரிவான விமர்சன அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2026-27 ஒன்றிய பட்ஜெட், நல்ல விளைவுகளற்றதாகவும் திசை தெரியாததாகவும் உள்ளது. இந்தியப் பொருளா தாரம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது என்றும், உலகளாவிய புவிசார் அரசியல் மாற்றங்கள் வரும் ஆண்டுகளில் முதலீடு, விநியோகச் சங்கிலி மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளைப் பாதிக்கும் என்றும் 2025-26 பொருளாதார ஆய்வறிக்கையே ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், இந்த பட்ஜெட் அந்த அடிப்படை சவால்களுக்குத் தீர்வு காணவோ அல்லது கொந்தளிப்பான உலகச் சூழலை எதிர் கொள்ள இந்தியாவைத் தயார்ப்படுத்தும் கொள்கை மாற்றங்களையோ முன்வைக்கவில்லை. தொழிலாளர் மற்றும் இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் சிஐடியு மற்றும் பிற மத்திய தொழிற்சங்கங்கள் தொடர்ந்து எச்சரித்து வந்ததைப் போலவே, பொருளாதார ஆய்வறிக்கையும் இந்த பட்ஜெட்டும் உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியின் சுமையை தொழிலாளர் வர்க்கம் மற்றும் சாமானிய மக்கள் மீது சுமத்துவதன் மூலம் அந்த நெருக்க டியைச் சமாளிக்க முயல்கின்றன.
சீர்திருத்தம் என்ற பெயரில், தொழிலாளர் விரோத ‘தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களை’ (Labour Codes) அமல் படுத்துவதையும், தரக் கட்டுப்பாட்டு விதிகளை நீர்த்துப்போகச் செய்வதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தொழிலாளர் உரிமைகளையும் உள்நாட்டுத் தொழில்களையும் சிதைக்கிறது. பட்ஜெட் உரை “யுவ சக்தி” (இளைஞர் சக்தி) என்ற சொல்லாடலுடன் தொடங்கினாலும், இறுதியில் 2047-ஆம் ஆண்டு வரையிலான இலக்குகளைக் கொண்ட “கல்வி முதல் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு வரை” என்ற ஒரு உயர்மட்டக் குழுவை அமைப்பதோடு முடிந்துவிட்டது. இந்திய இளைஞர்களுக்குத் தேவை உடனடி கண்ணியமான மற்றும் பாதுகாப்பான வேலைவாய்ப்பே தவிர, எட்டாக்கனி வாக்குறுதிகள் அல்ல. எண்களின் ஜாலம் நிதியமைச்சரின் தொடர்ச்சியான ஒன்பதாவது பட்ஜெட் என்பது, ஆழ்ந்த துயரத்தில் உள்ள பொரு ளாதாரத்தை மறைக்கும் ஒரு புள்ளிவிவரத் திரையே (Numerical Façade) ஆகும். நிதிப் பற்றாக் குறையை 4.3 சதவீதமாகவும், கடன்-ஜிடிபி விகி தத்தை 55.6 சதவீதமாகவும் குறைக்கும் முயற்சி யில், பசி மற்றும் வேலையின்மை போன்ற எதார்த்தங்களை விட நிதியியல் கணக்குகளைச் சரி செய்வதற்கே அரசாங்கம் முன்னுரிமை அளித்துள் ளது.
இது ஏழைகளின் கைகளில் இருந்து பணப் புழக்கத்தைத் திரும்பப் பெறும் ஒரு ‘நெருக்குதல் பட்ஜெட்’ (Squeeze Budget). ₹53.5 லட்சம் கோடி மொத்த செலவினம் என்று கூறப்பட்டாலும், உண்மை யான சித்திரம், சமூக ஆதரவுத் திட்டங்கள் திட்ட மிட்டு அழிக்கப்படுவதையே காட்டுகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் மீதான தாக்குதல் அதிக லாபம் ஈட்டும் கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு வரி விதித்து வருவாயைப் பெருக்க எந்த முயற்சியும் இல்லை. மாறாக, வரி அல்லாத வரு வாயில் 12.49 சதவீத உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. இது முக்கியமாக பொதுத்துறை நிறுவனங்க ளிடமிருந்து எதிர்பார்க்கப்படும் 16.9 சதவீத ஈவுத் தொகை (Dividends) அதிகரிப்பால் உந்தப்படு கிறது. இது பொதுத்துறை நிறுவனங்களை வலுப் படுத்துவதற்குப் பதிலாக, அவற்றை தனியார் நிறு வனங்களுடன் போட்டியிட வைத்து கசக்கிப் பிழிவ தாகும். வரி அல்லாத வருவாயைச் சார்ந்து இருப்பது மக்கள் மீதான சுமையையே அதிகரிக்கும். வெளிநாட்டு மானியங்களில் 49.5 சதவீத உயர்வு என்பது கொள்கை சுயாட்சி மற்றும் வெளிப்புற அழுத்தங்கள் குறித்த கவலைகளை எழுப்புகிறது. கடன் மற்றும் வட்டிச் சுமை அதிகரித்து வருவது, வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட் டில் மோசமான வெட்டுக்களை ஏற்படுத்தியுள்ளது. கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்கப்பட்ட சலுகைகள் இந்த பட்ஜெட் கோடீஸ்வர வர்க்கத்திற்கு அளிக்கப்பட்ட அப்பட்டமான பரிசு. குறைந்தபட்ச மாற்று வரி (MAT) 15 சதவீதத்திலிருந்து 14 சத வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
கார்ப்பரேட்டுக ளுக்கு சாதகமாக ‘பாதுகாப்பான புகலிட’ விதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. பன்னாட்டு நிறுவனங்க ளின் மீதான ஆய்வைக் குறைக்கும் வகையில் ‘முன்கூட்டிய விலை நிர்ணய ஒப்பந்தங்களுக்கான’ (APA) காலக்கெடு இரண்டு ஆண்டுகளாகக் குறைக் கப்பட்டுள்ளது. மறுபுறம், சாமானிய மக்கள் ஜிஎஸ்டி மற்றும் தனிநபர் வருமான வரி மூலம் ₹28.7 லட்சம் கோடி வரிச் சுமையை எதிர்கொள்கின்றனர். வர லாற்றில் முதல்முறையாக, கார்ப்பரேட் வரி வசூலை விட (₹12.31 லட்சம் கோடி) தனிநபர் வருமான வரி வசூல் (₹14.66 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. மேலும், வரித்தீர்வை கிடங்கு மண்டலங்களில் (Bonded zones) மூலதனப் பொருட்களை வழங்கும் வெளிநாட்டினருக்கு 5 ஆண்டு வரி விடுமுறை, விமா னப் பாகங்கள் மற்றும் மருத்துவக் கூறுகளுக்கு சுங்க வரி விலக்கு போன்றவை அளிக்கப்பட்டுள்ளன. இது அபாயங்களை சமூகமயமாக்கி (Socializing risks), லாபத்தை தனியார்மயமாக்கும் (Privatizing profits) செயலாகும். ‘வணிகத்தை எளிதாக்குதல்’ என்ற போர்வையில் வரி ஏய்ப்பாளர்களுக்கு எதி ரான குற்றவியல் நடவடிக்கைகளை நீக்கும் செயல் முறையை இந்த பட்ஜெட் முன்னெடுத்துள்ளது. அசையாச் சொத்து விற்பனையும் மேல்தட்டு ரயில்வேயும் பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பதன் மூலம் ₹80,000 கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இறக்குமதி வரியைக் குறைத்து ‘வாழ்வா தாரத்தை எளிதாக்குவதாக’ ஏமாற்று அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது. ஆனால் ‘பிரதமர் விஸ்வகர்மா யோஜனா’விற்கான ஒதுக்கீடு ₹3,993 கோடியிலிருந்து ₹3,891 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரா னிக்ஸ் உற்பத்திக்கு ₹40,000 கோடி மானியம், அணு மின் திட்டங்களுக்கு 2035 வரை சுங்க வரி விலக்கு, வெளிநாட்டு தரவு மையங்களுக்கு (Data Centres) 2047 வரை வரி விடுப்பு போன்றவை அரசாங்கத்தின் கார்ப்பரேட் முன்னுரிமைகளைத் தெளிவாகக் காட்டுகின்றன. ரயில்வே ஒதுக்கீடு மேல்தட்டு மக்களுக்கான வசதிகளை மட்டுமே ஊக்குவிக்கிறது. மும்பை-புனே, ஹைதராபாத்-சென்னை போன்ற ஏழு அதிவேக ரயில் வழித்தடங்களில் நிதி குவிக்கப்படு கிறது. ஆனால் சாதாரண பயணிகள் நெரிசலான பெட்டிகளில் அவதிப்படுகின்றனர்; மூத்த குடிமக்க ளுக்கான சலுகை மீண்டும் வழங்கப்படவில்லை. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான உள்கட்டமைப்பு ஒதுக்கீடு ₹9,650 கோடியிலிருந்து ₹24,000 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (AI) மிஷனுக்கான ஒதுக்கீடு ₹2,000 கோடியிலிருந்து ₹1,000 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. பொதுச் சொத்துக்களைச் சூறையாடி பணமாக்குதல் அதிகரித்த மூலதனச் செலவினங்கள், பொதுச் சொத்துக்களைப் பணமாக்கும் (Asset Monetisa tion) கொள்கைகள் (InvITs, REITs போன்றவை) மூலம் நிதியளிக்கப்படுகின்றன. இது நிதி இடை வெளிகளை நிரப்ப பொதுத்துறை நிறுவனங்களின் லாபத்தை எடுப்பது மற்றும் அவற்றின் சொத்துக்க ளைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது என்ற இரு முனை உத்தியாகும். ஒடிசா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் ₹7,280 கோடி மதிப்பிலான ‘அரிய மண் கனிம வழித்தடங்கள்’ பழங்குடியின மக்களை வெளியேற்றுவதற்கும் சுற்றுச்சூழல் அழி வுக்கும் வழிவகுக்கும். ₹10 லட்சம் கோடி மதிப்பிலான ‘சொத்து மறுசுழற்சி திட்டம்’ என்பது பொதுத்துறை நிறுவனங்களின் நிலம் மற்றும் உள்கட்டமைப்பை அடிமாட்டு விலைக்கு (Fire sale) விற்பதற்குச் சமம். சுகாதாரத் துறை ஒதுக்கீடு மொத்த செலவினத்தில் வெறும் 1.96% (₹1.01 லட்சம் கோடி) மட்டுமே. அதேசமயம் ₹10,000 கோடி “பயோபார்மா சக்தி” என்ற பெயரில் பெரிய மருந்து நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் சமூக நலன் புறக்கணிப்பு சிறு குறு, நடுத்தரத் தொழில் (MSME)களுக்கான ஒதுக்கீடு உயர்வு என்பது மிகக் குறைந்த உற்பத்தி நிலைகளுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. மறுபுறம், சிறப்பு பொருளாதார மண்டல (SEZ) அலகுகள் உள்நாட்டுப் பகுதியில் சலுகைக் கட்டணத்தில் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது உள்நாட்டுத் தொழில் களைப் பாதிக்கும். விவசாயத் துறையில், உர மானி யம் 8.4% குறைக்கப்பட்டுள்ளது. பிஎம் கிசான் மற்றும் பயிர் காப்பீடு போன்ற திட்டங்களில் பணவீக் கத்திற்கு ஏற்ற உயர்வு இல்லை. அங்கன்வாடி, ஆஷா போன்ற திட்ட ஊழியர்களின் (Scheme Workers) ஊதியம் அல்லது பணித்திறன் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கப்படவில்லை.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், வடகிழக்கு பிராந்தியங்கள், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய வற்றுக்கான ஒதுக்கீடுகள் வெட்டப்பட்டுள்ளன. பாலின பட்ஜெட் (Gender Budget) ₹51,144 கோடி குறைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற மேம்பாட்டுக்கான நிதி 13.16% குறைந்துள்ளது. எரிசக்தி மற்றும் அணு சக்தி ஆராய்ச்சி நிதி உயர்வு என்பது தனியார் நிறு வனங்களின் நுழைவை எளிதாக்கவே செய்யப் பட்டுள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்கள் புறக்கணிப்பு முறைசார் துறைகளில் வேலைவாய்ப்புத் தேக்கம் லட்சக்கணக்கானவர்களை பாதுகாப்பற்ற ‘கிக்’ (Gig) பணிகளுக்குத் (செயலி வழித் தொழிலாளர் கள்) தள்ளியுள்ளது. பட்ஜெட்டில் கிக் தொழிலா ளர்களின் நலனுக்காக எந்த நிதியும் ஒதுக்கப்பட வில்லை. அவர்களுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவது குறித்தும் அரசு மௌனம் காக்கிறது.
பிற அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் பட்ஜெட்டில் எந்த ஒதுக்கீடும் இல்லை. இந்தியத் தொழிலாளர்கள் பொருளாதாரக் கொந்தளிப்புக்கு மத்தியில் வாழப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், இது ஒரு முழு மையான மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத பட்ஜெட் ஆகும். இது சமத்துவமின்மையை மேலும் மோசமாக்கும். பிப்.12 தேசம் அதிரட்டும் இந்த பட்ஜெட்டை சிஐடியு திட்டவட்டமாக நிராக ரிக்கிறது. இந்தக் கொள்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டத்தைத் தீவிரப்படுத்தவும், வீதிக ளில் இறங்கிப் போராடவும், பிப்ரவரி 12 பொது வேலை நிறுத்தத்தை நோக்கி அணிவகுக்கவும் சிஐடியு உழைக்கும் மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறது.