நெல்லையில் இளம்பெண் சாதி ஆணவப் படுகொலை
காவல் நிலையத்தில் காதலன் புகார் திருநெல்வேலி, பிப்.2 - நெல்லையில் இளம்பெண் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டது குறித்து காவல் நிலையத்தில் காதலன் புகார் அளித்துள்ளார். நெல்லை பேட்டை செக்கடி அன்னதான விநாயகர் கோவில் தெரு வைச் சேர்ந்த அரசு போக்கு வரத்துக் கழக ஓட்டுநர் பச்சிராஜன்-தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி ஆகியோரது இளைய மகள் சிவமதி (18). பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரியில் படித்து வந்த இவரும், பேட்டை கடசர் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் அனந்த கிருஷ்ணன் என்பவரும் காதலித்து வந்தனர். இவர்கள் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்களது உறவினர் மகனுக்கு சிவமதியை திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடுகள் செய்தனர். இதற்கு சிவமதி மறுக்கவே, வேறு வழியின்றி அவருக்கும், அனந்த கிருஷ்ணனுக்கும் திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் சிவமதிக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி, கழுத்தில் காயத் துடன் டவுன் கண்டியப்பேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த னர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதற்கிடையே அனந்த கிருஷ்ணன் நெல்லை பேட்டை காவல்நிலையத் தில் அளித்த புகார் மனுவில் கூறி யிருப்பதாவது: எங்களின் காதலுக்கு சிவமதி யின் பெற்றோர் மற்றும் தாய்மாமன் எதிர்ப்பு தெரிவித்து சிவமதியை அடித்து துன்புறுத்தி வந்தனர். ஞாயிற்றுக்கிழமை சிவமதியின் மொபைலை அவரது பெற்றோரும், தாய் மாமாவும் பிடுங்கி வைத்துக் கொண்டு தொடர்ந்து துன்புறுத்தி யுள்ளனர். இந்நிலையில் சிவமதி எனக்கு போன் செய்து, அந்தப் பை யனை திருமணம் செய்யக் கூடாது. இல்லையென்றால் கொன்று விடு வோம் என்று பெற்றோரும், தாய் மாமாவும் மிரட்டுகின்றனர் என்பதால் எந்த நேரமும் ஆபத்து ஏற்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில் மாலை 6 மணிக்கு சிவமதி இறந்து விட்டது தெரிய வந்தது. எனவே பெற்றோர் மற்றும் தாய்மாமா ஆகியோர், சிவமதியை நான் திருமணம் செய்து விடக் கூடாது என்பதற்காக கொலை செய்துள்ள னர். எனவே இதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.