tamilnadu

img

நிறைவாழ்வு நகரில் குடிநீர், வாறுகால், தெரு விளக்கு வசதி செய்திடுக!

நிறைவாழ்வு நகரில் குடிநீர், வாறுகால், தெரு விளக்கு வசதி செய்திடுக!

விருதுநகர், பிப்.2- விருதுநகர் அருகே யுள்ள நிறைவாழ்வு நகரில்  அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரி க்கை மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியதாவது: விருதுநகர் ஒன்றியம், கூரைக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்டது நிறைவாழ்வு நகர், விருதுநகர் நகராட்சி யை ஒட்டியுள்ள விரிவாக்கப்  பகுதியாக உள்ளது. இங் குள்ள சுமார் 100 வீடுகளில் 500க்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்ற னர். மேலும் பலர் புதிய வீடு களை இங்கு கட்டி வரு கின்றனர். இந்நிலையில், இந்த பகு தியில் குடிநீர் வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் குடிநீரை தனியார் வியா பாரிகளிடம் அதிக விலை  கொடுத்து வாங்கி வருகின்ற னர். மேலும் கழிவுநீர் செல்வ தற்கு வாறுகால் வசதி செய்து  தரப்படவில்லை. இதனால்  இப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு நிலவி வருகிறது. மேலும், பல்வேறு தெருக்க ளில் சாலை வசதிகள் செய்து  தரப்படவில்லை. இதனால், மழைக் காலங்களில் சேறும், சகதியுமாக இப்பகுதி மாறி விடுகிறது. எனவே, குடியிருப்பு வாசிகள் தங்களது வீடு களுக்குச் செல்ல மிகவும் சிர மப்படும் நிலை உள்ளது. இதேபோல் தெரு விளக்கு களும் அனைத்து தெருக்களி லும் அமைத்து தரப்பட வில்லை. எனவே, இரவு  நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர அஞ்சுகின்ற னர். எனவே, நிறைவாழ்வு நகர் பகுதியில் குடிநீர், சாலை, தெரு விளக்கு, வாறு கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அதில் தெரி வித்துள்ளனர். இதில், நகரச் செயலா ளர் எம்.ஜெயபாரத், நகர் குழு உறுப்பினர் ஐ.ஜெயா, கிளைச் செயலாளர் ஆர். முருகேஸ்வரி, அருள் ஜோதி, சீதாலட்சுமி உள் ளிட்டோர் பங்கேற்றனர்.