பிப்.12 அன்று நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை விளக்கி ஞாயிறன்று (பிப்.1) தாம்பரம் சண்முகம் சாலையில் திறந்தவெளி கருத்தரங்கம் நடைபெற்றது. சிஐடியு தாம்பரம் பகுதி ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் இ.முத்துக்குமார் பேசினார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செந்தில்குமார், துணைத்தலைவர் ஏ.சாதிக்பாட்ஷா, துணைச் செயலாளர்கள் எம்.ஹெலன் தேவகிருபை, யு.அனில்குமார், முறைசாரா சங்க மாவட்டத் தலைவர் டி.ஏல.லதா ஆகியோர் உடன் உள்ளனர்.
