பிப்.12 அகில இந்திய பொது வேலைநிறுத்த கோரிக்கைகளை விளக்கி சனிக்கிழமையன்று (ஜன.31) மதுரவாயல் ஏரிக்கரையில் திறந்தவெளி கருத்தரங்கம் நடைபெற்றது. சிஐடியு மதுரவாயல் பகுதி ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் வி.தாமஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநில துணை தலைவர் எஸ்.கே.மகேந்திரன் பேசினார். சிஐடியு தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செந்தில்குமார், டி.அரவிந்தன் (போக்குவரத்து ஓய்வு) விஜயபாஸ்கர் (மின்ஊழியர் மத்திய அமைப்பு), பி.நாகேந்திரன், கே.சுப்பிரமணி (ஆட்டோ), எஸ்.விஜயலட்சுமி (முறைசாரா), பகுதி இணை ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
