சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் என்எஸ்கே பேரிங்ஸ் நிறுவனம் தொழிலக பாதுகாப்பு இயக்குநரிடம் புகார்
சென்னை, பிப். 2 - சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் என்எஸ்கே பேரிங்ஸ் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தொழி லாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள தொழிலக பாது காப்பு மற்றும் சுகாதார காஞ்சிபுரம் மாவட்ட இணை இயக்குநரிடம் திங்களன்று (பிப்.2) சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் இ.முத்துக்குமார், பொதுத்தொழிலாளர் சங்க செயலாளர் அ.ஜெனிட்டன், சங்க கிளைச் செயலாளர் டி.விஜயகுமார் ஆகியோர் மனு அளித்தனர். அதில், காஞ்சிபுரம் மாவட்டம், திருபெரும்புதூர் பகுதி ஒரகடம் மாத்தூர் கிராமத்தில் என்எஸ்கே பேரிங்ஸ் இந்தியா என்ற தனி யார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணி யாற்றும் 850 தொழி லாளர்களில் பெரும்பகுதி யினர் பொதுத்தொழிலாளர் சங்கத்தில் (சிஐடியு) உறுப்பி னர்களாக உள்ளனர். இந்நிறுவனத்தில், கான்ட்ராக்ட் தொழி லாளர்களை நேரடி உற்பத்தி யில் ஈடுபடுத்துகின்றனர். ஒப்பந்த தொழிலாளர்களை 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர். தொழிலாளர்களின் எண்ணி க்கைக்கு ஏற்ப போதிய கழிவறைகள் இல்லை. மேலும், 2 மற்றும் 3வது பணி நேரங்களில் கழி வறைகள் தூய்மையாக இல்லை. அரசிடம் அனுமதி பெற்றதை விட கூடுத லாக கான்ட்ராக்ட் தொழி லாளர்களை பணி அமர்த்தி வேலை வாங்குகின்றனர். இவை அனைத்தும் இந்திய தொழிற்சாலைகள் சட்டம் 1948 பிரிவு 6, 19, 51, 59 ஆகியவற்றுக்கு எதிரானது. எனவே, இதன்மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். பெண் ஒப்பந்த தொழி லாளர்களுக்கு நிர்வாகப் பிரிவு ஊழியர்கள் பாலியல் தொல்லை தருவதாக புகார் எழுந்துள்ள நிலையில், அதன்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனு வில் கூறப்பட்டுள்ளது.
