திருப்போரூர் பூர்வீக நில உரிமை அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் போக்கிற்கு சிபிஎம் கண்டனம்!
செங்கல்பட்டு, பிப்.2- திருப்போரூர் கந்தசாமி கோயில் நில விவகாரத்தில் உண்மை ஆவ ணங்களை மறைத்து, 150 ஆண்டு களுக்கும் மேலாக வசித்து வரும் பூர்வீகக் குடிகளை ஆக்கிர மிப்பாளர்கள் என அகற்றும் நட வடிக்கையைத் தடுத்து நிறுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. சிபிஎம் மாவட்டச்செயலாளர் பி.எஸ்.பாரதி அண்ணா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறியிருப்பதாவது, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வருவாய் கிராமத்தில் சுமார் 375 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில், 300-க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக பூர்வீகமாக வசித்து வருகின்றனர். நாடு விடுதலைக்கு முன்னரே இப்பகுதி எஸ்டேட் கிராமமாக இருந்த போது, மிராசுதாரர் சிங்காரவேலு முதலி என்பவரி டமிருந்து ரயத்துவாரி முறையில் பட்டா பெற்று, முறையாக நிலவரி செலுத்தி மக்கள் அனு பவித்து வந்துள்ளனர். எஸ்டேட் ஒழிப்புச் சட்டத்திற்குப் பிறகு இந்த நிலங்களின் முழு உரிமையாளர்களாக விவசாயிகளே நீடிக்கின்றனர். இந்நிலையில், கடந்த 1985-ஆம் ஆண்டு காலாவதியான பழைய மிராசுதாரர் பட்டாவை வைத்து, உண்மைக்கு மாறான தகவல்களை அளித்து இந்து அறநிலையத்துறை முறை கேடாக யூடிஆர் பட்டா பெற்றுள்ளது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த செங்கல்பட்டு உரிமையியல் மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள், "இது எஸ்டேட் கிராமம் என்பதால் கோயிலுக்கு இதில் உரிமை கோர தகுதியில்லை" எனத் தீர்ப்பளித்தன. இருப்பினும், சென்னை உயர்நீதிமன்றம் ஆவ ணங்களைச் சரியாக ஆய்வு செய்யா மல் கோயிலுக்கு ஆதரவாகத் தீர்ப்ப ளித்தது. இதனை எதிர்த்து விவ சாயிகள் உச்சநீதிமன்றம் சென்றபோது, நீதியரசர்கள் ரஞ்சன் கோகாய் மற்றும் என்.வி. ரமணா அடங்கிய அமர்வு, உயர்நீதி மன்றத் தீர்ப்பை ரத்து செய்ததோடு, பட்டா எண் 1-ன் உண்மைத்தன்மை குறித்து மறு விசாரணை நடத்த உத்தரவிட்டது. இந்தச் சூழலில், உச்சநீதிமன்ற உத்தரவு களை மறைத்து ஜெகநாதன் என்பவர் மூலம் தொடரப்பட்ட ஒரு பொதுநல வழக்கைப் பயன்படுத்தி, 13-வது வார்டு மீன் மார்க்கெட் தெரு, புதுத்தெரு, கண்ணகப்பட்டு உள்ளிட்ட பகுதி களில் வசிக்கும் பூர்வீகக் குடிகளை ஆக்கிர மிப்பாளர்கள் எனக் கூறி அகற்றும் பணியில் அறநிலையத்துறையும், மாவட்ட நிர்வாகமும் தீவிரம் காட்டி வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்க ளின் தரப்பு வாதங்களைக் கேட்காமலேயே நிலங்களைக் கையகப்படுத்த முற்படுவது நீதியற்ற செயலாகும். ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு நிலுவையில் உள்ள பட்டா மாறுதல் கோப்புகளை ஆய்வு செய்து உரியத் தீர்வு காண வேண்டும் என பாரதி அண்ணா வலியுறுத்தியுள்ளார்.