பளியர் மக்கள் தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கான இடம் ஆக்கிரமிப்பு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார்
திண்டுக்கல், பிப்.2- ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கோட்டை வழி கிரா மத்தில் வசிக்கும் பளியர் பழங்குடியினருக்கு அரசு தொகுப்பு வீடுகள் கட்டுவ தில் சிக்கல் ஏற்பட்டுள்ள தாக, அக்கிராம மக்கள் திண் டுக்கல் மாவட்ட ஆட்சியரி டம் புகார் அளித்துள்ளனர். திங்களன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நடைபெற்ற மனு நீதி நாளில் அளிக்கப்பட்ட மனு வில், அவர்கள் தெரிவித்துள் ளதாவது: ஒட்டன்சத்திரம் மலைப் பகுதியில் உள்ள சிறு வாட்டுக் காடு கிராமத்தைச் சேர்ந்த பளியர் பழங்குடி சமூக மக்கள், யானைத் தொல்லை அதிகமாக இருந் ததால், வனத்துறை அதிகாரி களின் வழிகாட்டுதலின்படி கோட்டை வழி பகுதியில் வீடு கள் அமைத்து கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் வசித்து வருகின்றனர். அப்போது 7 குடும்பங்களாக இருந்த இவர்கள், தற்போது 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள், சுமார் 150 பேர் வரை வசித்து வருகின்றனர். இவர்களுக்காக அரசு வீடுகள் கட்டி வழங்க முடிவு செய்த நிலையில், 269ஆம் சர்வே எண்ணில் கடந்த காலங்களில் 7 பேருக்கும், 2024ஆம் ஆண்டு மேலும் 38 பேருக்கும் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அதே பகுதியில் வசிக்கும் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த ஒரு வர், பளியர்களுக்கு வழங் கப்பட்ட பட்டா நிலங்களை பணம் தருவதாக கூறி ஏமா ற்றி வாங்கி, மனைகளாக பிரித்து விற்பனை செய்து வருவதாக குற்றம்சாட்டப் பட்டுள்ளது. மேலும், பளியர் களுக்கென நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட அரசு நிலங்களை போலி யாக பத்திரப்பதிவு செய்து அபகரித்து வருவதாக வும் மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது. நிலங்களை வாங்கியவர்கள் வெளியூ ரைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. கோட்டை வழி கிராமத் தில், 38 பளியர் குடும்பங் களுக்கு தமிழக அரசு தொல் குடி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 29 வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 9 வீடு கள் கட்டுவதற்கு நிலம் இல்லாததால், திட்டத்தை நிறைவு செய்ய முடியா மல் வட்டார வளர்ச்சி அலு வலர்கள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் திணறி வருவதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. மேலும், ஏற்கனவே முறைகேடாக அரசு நில த்தை ஆக்கிரமித்து பத்தி ரப்பதிவு செய்ததாக கூறப் படும் 4 நபர்கள் பிரச்சனை எழுப்பி வருவதாகவும், ஒரு வர் பளியர் கிராமத்துக்கான பொதுப் பாதையையே ஆக்கிரமித்து பத்திரம் பதிந்த தாக கூறி ரகளையில் ஈடுபடு வதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து திங்க ளன்று மனு நீதி நாளில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சி யரிடம் புகார் அளித்த பளி யர் மக்கள், தங்களுக்காக ஒதுக்கப்பட்ட அரசு வீடு களை கட்டித் தர உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள னர். இதற்கு உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என ஆட்சியரின் உதவியாளர் கள் உறுதி அளித்தனர்.
