tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தோழர் ஆர்.நல்லகண்ணு மீண்டும்  மருத்துவமனையில் அனுமதி

சென்னை, பிப்.2 – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், நூறு வயதான அரசியல் தலைவருமான ஆர்.நல்ல கண்ணு, மூச்சுத் திணறல் பிரச்சனை காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை ராஜீவ் காந்தி அரசு  பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதுமை காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்து வந்த  நல்லகண்ணு, கடந்தாண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி தவறி விழுந்து காயமடைந்தார். அப்போது மூச்சுத் திணறல் பிரச்சனை ஏற்பட்டதால், ராஜீவ் காந்தி மருத்துவமனை யில் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டது. அதன்பிறகு, அடிக்கடி மூச்சுத்  திணறல் பிரச்சனை காரணமாக அவர் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பி  வந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் மூச்சுத் திணறல் பிரச்சனை ஏற்பட்டதையடுத்து, நல்லகண்ணு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழுவின் கண்காணிப் பில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பொது வேலை நிறுத்தத்தை  வெற்றி பெறச் செய்வோம்! விசைத்தறி தொழிலாளர் சங்கம் அழைப்பு

நாமக்கல், பிப்.2 - ஒன்றிய அரசை கண்டித்து பிப்.12 ஆம் தேதி நாடு  முழுவதும் நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தத்தை  வெற்றி பெறச் செய்திடுவோம் என விசைத்தறி தொழி லாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலக் குழு கூட்டம், நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோட்டிலுள்ள காவேரி முதலியார் நினைவகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஆர்.சோமசுந்தரம் தலைமை வகித்தார். சிஐடியு மாநில உதவித் தலைவர் எம்.சந்திரன், சம்மேளன பொதுச் செயலாளர் பி.முத்துசாமி, பொருளாளர் எம்.அசோகன்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில், தொழிலாளர் – விவசாயிகள் – மக்கள்  விரோத ஒன்றிய அரசை கண்டித்து பிப்.12 ஆம் தேதி  நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடைபெற வுள்ளது. இதனை மாபெரும் வெற்றி பெறச் செய்ய, விசைத்தறி தொழிலாளர்களை பெருமளவில் பங்கேற்க வைக்க வேண்டும். மேலும், நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்தாண்டு மே மாதத்துடன் நிறை வடைந்து விட்டது. உடனடியாக விசைத்தறி நிர்வாகங் களும் தமிழக அரசும் தலையிட்டு, தொழிலாளர் களுடைய கூலி உயர்வு உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கை  குறித்து பேசி தீர்வு காண வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

அன்புமணிக்கு எதிரான வழக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

சென்னை, பிப்.2 –  பாமக நிறுவனர் ராமதாஸ் தொடுத்த வழக்கில், மூன்று  வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத் துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்புமணிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கி தேர்தல்  ஆணையம் அனுப்பிய கடிதத்தை ரத்து செய்யக் கோரி  ராமதாஸ் வழக்கு தொடுத்துள்ளார். தனது முகவரிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்ப உத்தரவிடக் கோரி யும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். வழக்கு விசாரணையின் போது, எதிர்தரப்பினராக இல்லாத போது வாதிட அனுமதிக்க முடியாது என அன்பு மணி தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் அனுமதி மறுத்து விட்டனர்.

நீட் முதுநிலை தேர்வு என்ஆர்ஐ கோட்டாவில் முறைகேடு

சென்னை, பிப்.2 –  நீட் முதுநிலை தேர்வில் மிகக் குறைந்த  மதிப்பெண் பெற்ற உயர்சாதி ஏழை மாணவர்கள்,  வெளிநாடு வாழ் இந்தியர்கள் கோட்டாவின் மூலம்  மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள முறைகேடு அம்பலமாகியுள்ளது. மூன்றாவது கட்ட கவுன்சிலிங்கில் முதுநிலை மருத்துவப் படிப்பில் இடம்பெற 811 மாணவர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவுக்கு மாறி யுள்ளனர். என்ஆர்ஐ கோட்டாவுக்கு மாறுவதன்  மூலம், நீட் தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்  பெற்ற உயர்சாதி ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடிந்துள்ளது. மருத்துவப் படிப்பில்  சேர்வதற்காக இந்தியர் என்பதை வெளிநாடு வாழ் இந்தியர் என்று குடியுரிமை தகுதியை மாற்றி  மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிறுசேரி சிப்காட் சுற்றுச்சூழல் பூங்கா திறப்பு

சென்னை, பிப். 2- சிறுசேரி சிப்காட் தொழில்நுட்ப பூங்கா வளா கத்தில் உள்ள நாவலூர் ஏரி ரூ.30 கோடியில் தூர்வாரப்பட்டு, கரைகளைப் பலப்படுத்தி புன ரமைத்து அமைக்கப்பட்டுள்ள சிப்காட் சுற்றுச் சூழல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அந்த வகையில், சிறுசேரி சிப்காட் தகவல்  நுட்ப பூங்கா வளாகமானது 782.51 ஏக்கர் பரப்பள வில் 2022 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டு செயல் பட்டு வருகிறது. இந்த தகவல் தொழில்நுட்பப் பூங்கா சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளதுடன், சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டையும் ஈர்த்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு, நாவலூர் ஏரி வறண்டு போகும் நிலையில் இருந்தபோது, சிப்காட் முழு அளவிலான மாற்றத்தை உரு வாக்கிட முன் நின்றது. தகவல் தொழில்நுட்பப் பூங்கா மற்றும் அதன் சுற்றுப்புறங்களின் நிலைத் தன்மையை உறுதி செய்யும் ஒரு முனைப்புடன், சிப்காட் நிறுவனம் 33.43  ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நாவலூர் ஏரியைத் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்தி புனரமைத்தும், பூங்காக்கள், புல்வெளிகளுடன் கூடிய நடை பயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டும் பாதை களை அமைத்தும் சுற்றுச்சூழல் பூங்கா உரு வாக்கப்பட்டுள்ளது. இச்சுற்றுச்சூழல் பூங்காவானது சுற்றுச்சூழல் அறிவு மையம், சிறுவர் - சிறுமியருக்கான விளை யாட்டுப் பகுதி, திறந்தவெளி உடற்பயிற்சி மேற் கொள்வதற்கான வசதிகள், பறவைகள் பார்வை  மையம், திறந்தவெளி அரங்கம், நிர்வாக அலுவ லகம், உணவகம், குடில்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு  நிலையம், பாதுகாப்பு மற்றும் கழிப்பறை வசதிகள் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களை உள்ள டக்கியுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

விவசாயிகள் வங்கி கணக்கில் காப்பீட்டு தொகை வரவு சென்னை: விவசாயி கள் வங்கி கணக்கில் பிப்ரவரி 15 ஆம் தேதி  முதல் காப்பீட்டு தொ கையை வரவு வைக்க வேண்டும் என அமைச்சர்  எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்து உள்ளார். 2025 ஆம் ஆண்டு குறுவை பருவத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் பிப்.14 ஆம் தேதிக்குள் ஒப்புதல் தந்து, பிப்.15  ஆம் தேதி முதல் வரவு  வைக்க வேண்டும். சம்பா நெல் பயிர் அறு வடை பரிசோதனை விவ ரம் 34 மாவட்டங்களில் 32,428 நாட்கள் நடத்தப் பட வேண்டும். தற்போது  25 சதவீதம் முடிவுற்ற நிலையில் மீதமுள்ள 75  சதவீதம் முடிவுற்றவுடன் பயிர் காப்பீட்டு இழப் பீட்டுத் தொகை வழங்கப் படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். வெள்ள பாதிப்புக்கு  உள்ளான நாகப்பட்டி னம், திருவாரூர் மாவட் டங்களில் ஒரு வாரத் தில் இழப்பீட்டு தொகை  வழங்க வேண்டும் என் றும் அவர் கூறியுள்ளார். பிப்.11-இல் பிரதமர் புதுச்சேரி வருகை புதுச்சேரி: பிப். 11 ஆம் தேதி புதுச்சேரி வரும் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங் களை தொடங்கி வைக்க  உள்ளார். லாஸ்பேட்டை தாகூர் கலைக் கல்லூரி  மைதானத்தில் திட்டங் கள் தொடக்க விழா நடை பெற உள்ளது. விழா நடைபெறும் இடத்தை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாய கர் செல்வம் ஆகியோர் ஆய்வு செய்தனர். இலங்கைக்கு கடத்த முயன்ற 200 கிலோ கஞ்சா பறிமுதல் இராமநாதபுரம்: இலங்கைக்கு கடல் வழி யாக கடத்த முயன்ற ரூ.30 லட்சம் மதிப்புள்ள  200 கிலோ கஞ்சா பறி முதல் செய்யப்பட்டது. 200 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்த முயன்ற மணிகண்டன் என்பவர் கைது செய்யப் பட்டார்.