tamilnadu

img

கோவையில் 2 நகரக்குழுக்கள் ரூ. 8 லட்சம் நிதியளிப்பு

கோவையில் 2 நகரக்குழுக்கள் ரூ. 8 லட்சம் நிதியளிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிங்காநல்லூர் மற்றும் பீளமேடு நகரக்குழுக்கள் சார்பில், கட்சி நிதி மற்றும் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் கோவை, பீளமேட்டில் ஞாயிறன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தலா ரூ. 4 லட்சம் விகிதம் 2 நகரக்குழுக்கள் சார்பில் மொத்தம் ரூ. 8 லட்சம் கட்சி வளர்ச்சி நிதி, மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், கட்சியின் மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. அஜய்குமார், வி. தெய்வேந்திரன், வி.சுரேஷ், பீளமேடு நகரச் செயலாளர் ஏ. மேகநாதன், சிங்கை நகரச் செயலாளர் ஆர். மூர்த்தி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள்,  கிளைச் செயலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.