144 தடை உத்தரவு குறித்து மதுரை ஆட்சியர் விளக்கம் பக்தர்களின் பாதுகாப்புக்காகவே நடவடிக்கை – நீதிமன்றத்தில் பதில்
மதுரை, பிப்.2– திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நிறை வேற்றத் தவறியதாக, மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரி கள் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு திங்களன்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பாக விசார ணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சி யர் பிரவீன் குமார், மாநகர காவல் ஆணை யர் லோகநாதன், துணை காவல் ஆணை யர் இனிகோ திவ்யன் மற்றும் திருப்ப ரங்குன்றம் கோவில் செயல் அலுவலர் ஆகி யோர் நேரில் ஆஜராகினர். மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் கோவில் செயல் அலுவலர் தரப்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மாவட்ட ஆட்சியர் தரப்பு மனுவில், நீதி மன்ற உத்தரவை மீற வேண்டுமென்ற நோக்கம் எதுவும் இல்லை என்றும், அப்போ தைய சட்டம்–ஒழுங்கு சூழல் மற்றும் பொது மக்கள், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டது. மதக்கலவரம் ஏற்படும் அபாயம் இருந்ததாக தகவல் கிடைத்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், நிபந்த னையற்ற மன்னிப்பை ஏற்று வழக்கை முடித்து வைக்க வேண்டும் எனவும் மனு வில் கோரப்பட்டது. காவல் ஆணையர் தரப்பிலும் இதே போன்ற விளக்கங்கள் அளிக்கப்பட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நீதிபதி, “நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்ட பிறகும், மாவட்ட ஆட்சியர் எவ்வாறு 144 தடை உத்தரவை பிறப்பிக்க முடியும்? அவருக்கு எவ்வளவு தைரியம்?” என கடுமையாக கேள்வி எழுப்பினார். மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜரான நாளில் வெளியான நாளிதழ் புகைப்படங்களை சுட்டிக்காட்டிய நீதிபதி, “நீதிமன்றத்திற்கு வந்தவர்கள் போல இல்லாமல், விளம்பரத்திற்கு வந்தவர்கள் போல புன்னகையுடன் இருந்தனர்” என வும் கண்டனம் தெரிவித்தார். அரசுத்தரப்பில், “நீதிமன்றத்தை அவ மதிக்க வேண்டுமென்ற நோக்கம் இல்லை. தவறுகள் நடந்திருக்கலாம். ஒரு இளை ஞரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியர் தரப்பில் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும்” என கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அடுத்த விசாரணையில் மாவட்ட ஆட்சியர் மட்டும் ஆஜராக வேண்டும் என்றும், காவல் ஆணையர், துணை ஆணையர் மற்றும் கோவில் செயல் அலுவலர் ஆஜராக தேவையில்லை என்றும் உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.