சிபிஎம் தலைவர்களுடன் இந்திய தேசிய லீக் தலைவர்கள் சந்திப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆகியோரை, இந்திய தேசிய லீக் கட்சியின் அகில இந்திய தலைவர் பேரா. முகமது சுலைமான், மாநிலத் தலைவர் நாகூர் ராஜா ஆகிய இருவரும் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இந்திய தேசிய லீக் கட்சியின் தேசிய துணை தலைவர் டாக்டர் சகில் அகமது, மாநில பொதுச் செயலாளர் சையத் சதான் அகமது, மாநில துணைத் தலைவர் ஸ்டார் பாட்சா, மாநில இளைஞர் அணி செயலாளர் எஸ்.வாசிம் அக்ரம் ஆகியோர் உடனிருந்தனர்.
