articles

img

மோடி பட்ஜெட் கார்ப்பரேட் - இந்துத்துவ சக்திகளின் கணக்கு மோசடி! - பி. வெங்கட்

மோடி பட்ஜெட் மோடி பட்ஜெட் கார்ப்பரேட் - இந்துத்துவ சக்திகளின் கணக்கு மோசடி! - பி. வெங்கட்

“வார்த்தைகள் அல்ல, செயல்களே முக்கியம்” என்பார்கள் பெரியோர்கள். ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, மக்களை வார்த்தைகளால் ஏமாற்றிவிட்டு, செயல்களால் அவர்கள் வாழ்க்கை யைத் துயரத்தில் ஆழ்த்தி வருகிறது. நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-27 பட்ஜெட், கார்ப்பரேட் மூலதனமும், வகுப்புவாத அரசியலும் கைகோர்த்து உருவாக்கியுள்ள ஒரு கணக்கு மோசடி (Accounting Illusion). திரைக்கதை தயாராகிவிட்டது; நிர்மலா சீதாராமன் அதை வாசித்து முடித்துவிட்டார். பட்ஜெட் என்பது வெறும் வருவாய்-செலவின அறிக்கை அல்ல; அது ஒரு அரசின் வர்க்கத் தன்மையை வெளிப்படுத்தும் அரசியல் ஆவணம்.

இது ஏழைகளுக்கான பட்ஜெட் அல்ல;  மாறாக, பெரும் பணக்காரர்களின் நலன்களைப் பாது காக்கும் பகிரங்கமான கொள்கைப் பிரகடனம். எண்களின் ஜாலம்: திருத்திய மதிப்பீடு எனும் மோசடி இந்த பட்ஜெட்டின் ஏமாற்றத்தைப் புரிந்து கொள்ள ‘திருத்திய மதிப்பீடு’ (Revised Estimates) என்ற வார்த்தையை நாம் கவனிக்க வேண்டும். மக்களிடம் பாராட்டுப் பெறப் பட்ஜெட்டில் ஒரு பெரும் தொகையை அறிவித்துவிட்டு, ஆண்டு இறுதியில் அதைச் செலவு செய்யாமல் அரசு பின்வாங்கிவிடும். 2025-26 பட்ஜெட்டில் மொத்தம் ₹50,65,345 கோடி செலவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், திருத்திய மதிப்பீட்டில் அது ₹49,64,842 கோடியாகக் குறைக்கப்பட்டது.  

அதாவது, அறிவித்த தொகையில் ஒரு லட்சம் கோடியை அரசு செலவு  செய்யாமல் கைகழுவிவிட்டது. இப்போது 2026-27 பட்ஜெட்டில் ₹53,47,315 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது; இது 6% உயர்வு என்று விளம்பரப் படுத்தப்படுகிறது. ஆனால், பணவீக்கத்தைக் கணக்கில் கொண்டால் இது உயர்வு அல்ல, பொதுச் செலவினங்களின் சுருக்கமே. மக்கள் துறைகளில் கண்மூடித்தனமான வெட்டு மக்களோடு நேரடியாகத் தொடர்புடைய துறைகளில் சுமார் ₹1,40,000 கோடிக்கும் மேலாகத் திருத்திய மதிப்பீட்டில் வெட்டப் பட்டுள்ளது: கல்வி: ₹1,28,650 கோடியிலிருந்து ₹1,21,949 கோடியாகக் குறைப்பு. சுகாதாரம்: ₹98,311 கோடியிலிருந்து ₹94,651 கோடியாகக் குறைப்பு. ஊரக வளர்ச்சி: ₹2,65,817 கோடியிலிருந்து ₹2,12,750 கோடியாகச் சரிவு. ஜல் ஜீவன் (குடிநீர்): ₹67,000 கோடியிலிருந்து வெறும் ₹17,000 கோடியாக வெட்டப்பட்டுள்ளது. பழங்குடியின குழந்தைகளுக்கான ஏகலைவா பள்ளிகளுக்கு ₹7,000 கோடி என்று காட்டிவிட்டு, வெறும் ₹5 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

து வளர்ச்சிக்கான பட்ஜெட் அல்ல; ஏழைகளின் வாழ்வாதாரத்தின் மீது நடத்தப்பட்ட நேரடித் தாக்குதல். கார்ப்பரேட்களுக்குச் சலுகை -  மக்கள் மீது வரிப்பளு அரசுக்கு வரும் வருமானத்தில் கார்ப்பரேட் வரி சுமார் ₹11-12 லட்சம் கோடியாகவே உள்ளது. ஆனால், மறைமுக வரியான ஜிஎஸ்டி (GST) ₹14-15 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. சாமானிய மக்களின் அன்றாடப் பொருட்கள் மீது வரி போட்டு இரத்தம் குடிக்கும் இந்த ஜிஎஸ்டி முறை, கார்ப்பரேட் லாபத்தின் மீது வரி விதிக்கத் தயங்குகிறது. வரலாற்றிலேயே முதல் முறையாக, கார்ப்பரேட் வரி வசூலை விட தனி நபர் வருமான வரி வசூல் அதிகரித்துள்ளது; இது  இந்த பட்ஜெட்டின் வர்க்கத் தன்மையை அப்பட்ட மாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. வேலைவாய்ப்பு உறுதித் திட்ட மோசடி 125 நாட்கள் வேலை உறுதி என்று வாக்குறுதி அளித்துவிட்டு, அதற்கு வெறும் ₹95,000 கோடி மட்டுமே ஒதுக்குவது மிகப்பெரிய மோசடி. ஏற்கனவே ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிலுவை உள்ள நிலையில், 125 நாட்கள் வேலை வழங்கக் குறைந்தது ₹3 லட்சம் கோடி தேவை. ஆனால் அரசு இத்திட்டத்தைத் திட்டமிட்டே பலவீனப்படுத்துகிறது. ரயில்வே மற்றும்  இயற்கை வளங்கள் ரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டில் இணைக்கப்பட்ட பிறகு, அதன் கவனம் முழுவதும்  மேல்தட்டு மக்களுக்கான அதிவேக ரயில்கள் மீதே உள்ளது.

சாதாரண மக்கள் பயணிக்கும் ரயில்களும், பெட்டிகளும் புறக்கணிக்கப்படு கின்றன. ₹20,000 கோடி ரயில் பாதை பராமரிப்பு நிதி திருத்திய மதிப்பீட்டில் ரத்து செய்யப்பட்டுள்ளது; இது லாபத்திற்காக மக்களின் பாதுகாப்பைப் பலியிடும் செயலாகும். அதேபோல், செமிகண்டக்டர் மற்றும் அரிய வகை கனிம வழித்தடங்கள் என்ற பெயரில் நாட்டின் வளங்களைக் கார்ப்பரேட்களிடம் தாரை வார்க்கிறார்கள். கேரளப் பாதையும்  மோடி பாதையும் குறைந்த நிதி ஆதாரங்களைக் கொண்டு கூட மக்களின் வாங்கும் சக்தியை எப்படி அதிகரிக்க முடியும் என்பதை இடதுசாரிகள் தலைமையிலான கேரள அரசு நிரூபித்துக் காட்டியுள்ளது. ஆனால், ஒன்றிய பட்ஜெட்டோ கார்ப்பரேட் லாபத்தையும், வகுப்புவாதத் திட்டத்தையும் மையமாகக் கொண்டுள்ளது. மாற்று வழி என்ன? இது மக்கள் பட்ஜெட் அல்ல. இதற்கு மாற்றாக: • கார்ப்பரேட்கள் மீது அதிக வரி விதிக்கப்பட வேண்டும்.  • தனியார் மருத்துவமனைகள், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற வசதி படைத்தவர்கள் மீது வரி உயர்த்தப்பட வேண்டும்.  • அந்த வருவாயைப் பொதுச் சுகாதாரம், கல்வி, ஊரக வேலைவாய்ப்பு மற்றும் விவசாயத்திற்குச் செலவிட வேண்டும். மக்களின் ஒற்றுமையே இந்தக் கொள்கை களை எதிர்க்கும் ஒரே வழியாகும். இந்த பட்ஜெட்டைப் புரிந்து கொள்வதும், நிராகரிப்பதும், மாற்று வழியை உருவாக்குவதுமே நம் முன் உள்ள உடனடி அரசியல் கடமையாகும். - தமிழில் சுருக்கம் : ராகினி