articles

ஆபத்தான வேலைகளில் பெண் தொழிலாளர்களை இரவு நேரப் பணிகளில் அனுமதிக்கும் அறிவிப்பை கைவிடுக சிஐடியு

ஆபத்தான வேலைகளில் பெண் தொழிலாளர்களை இரவு நேரப் பணிகளில் அனுமதிக்கும் அறிவிப்பை கைவிடுக : சிஐடியு

சென்னை, அக்.22 - சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன், பொதுச் செயலாளர் ஜி. சுகுமாறன் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தி ருப்பதாவது: தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை தமிழ்நாடு தொழிற்சாலை விதிகளில் (1950) திருத்தம் செய்திட நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது இதுவரை அபாயகரமான மற்றும் தடை  செய்யப்பட்ட தொழில் என்று கருதப்பட்ட 20-க்கும் மேற்பட்ட தொழில் நடவடிக்கைகளில் இனி பெண் தொழி லாளர்களை அனுமதிப்பது என்றும், மேலும் பெண் தொழிலாளர்களிடம் ஒப்புதல் கேட்டு தொழிற்சாலைகளில் இரவு நேரப் பணிகளில் ஈடுபடுத்து வதற்கான திருத்தத்தை முன்மொழிந்துள்ளது.   இந்த திருத்தங்கள் கடந்த 2025 செப்டம்பர் 2 அன்று தொழிலாளர் துறை யின் அறிவிக்கை மூலமாக வெளி யிடப்பட்டு, 45 நாட்களுக்குள் ஆலோச னைகள் மற்றும் பதிலளிக்க வேண்டுமென தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து தொழிற்சங்கங்களிடம் எந்தவித ஆலோசனைகளும் பெறாமல் இந்த அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.  ஆபத்தான நடவடிக்கை பணிகள் என வரையறுக்கப்பட்ட எலக்ட்ரோலை ட்ஸ் செயல்முறை, கண்ணாடி உற்பத்தி,  ஈயம் மற்றும் சில ஈய சேர்மங்களை உற்பத்தி செய்தல் மற்றும் பதப்படுத்து தல், எரிவாயு உற்பத்தி, பெட்ரோலியம், சுண்ணாம்பு பதப்படுத்துதல் மற்றும் தோல்களை பதப்படுத்துதல், கிராஃபைட் பொடி செய்தல், முந்திரி பருப்பு பதப்படுத்துதல், சாயமிடுதல் ஸ்டென்சிலிங், கம்பளி, தென்னை நார்  மற்றும் நார் தொழிற்சாலைகள் மற்றும் மண்பாண்டத் தொழில் போன்ற வற்றில், ரசாயன வேலைகள், புற்று நோய் உண்டாக்கும் சாயங்கள், கரைப் பான் பிரித்தெடுக்கும் ஆலைகளில் எண்ணெய் மற்றும் கொழுப்பு சாறு கள், ஆபத்தான பூச்சிக்கொல்லிகள் மற்றும் அதிக இரைச்சல் அளவை உள்ளடக்கிய செயல்பாடுகள் - இவற் றில் இனி பெண் தொழிலாளர்கள் வேலை செய்ய அனுமதிக்கலாம் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பெண் தொழிலாளர்களை மேற்கூறிய இந்த ஆபத்தான தொழில் களில் வேலை செய்ய முற்படுத்துவது என்பது அவர்களின் உடல் நலனை/பாதுகாப்பை கேள்விக்குறியாக மாற்றக் கூடியதாகும். பெருமளவு உடல் உபா தைகளை மேற்கொள்ளும் இந்த ஆபத் தான தொழில்களில், பெண் தொழி லாளர்களின் பாதுகாப்பை எந்தளவு உறுதி செய்ய முடியும் என்பது குறித்து எந்த விளக்கமும் இல்லை.  தமிழ்நாடு அரசு முதலாளிகளுக்கு ஆதரவாக உலகமய கொள்கைகள் அமலாக்கம், மேலும் அதிகரித்து வரும் வேலையின்மை, பொருளாதார நெருக்கடி போன்ற அரசின் நட வடிக்கைகளால் இன்றைக்கு பெண் களின் வேலை நேரம், பாதுகாப்பு, சம வேலைக்கு சம ஊதியம் என்பது கானல் நீராக மாறியுள்ளது. இச்சூழலில் இப்பணிகளில் பெண்களை, இரவு நேரத்தில் விருப்பமிருந்தால் பணி செய்ய அனுமதிக்கலாம் என்பதை முற்றிலும் ஏற்க முடியாது என சிஐடியு கருதுகிறது. இந்த அறிவிப்பால் நிறு வனங்கள் பெண்களை இந்த அபாய கரமான தொழிலில் ஈடுபடுத்திட நிர்பந்தப்படுத்தும் நிலை ஏற்படும்.  ஆகவே பெண் தொழிலாளர்களை இப்படிப்பட்ட ஆபத்தான தொழில் களில் இரவுப் பணிகளில் அனுமதிப்ப தற்கான தொழிற்சாலை சட்டத்திருத்த த்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டுமெனவும், இச்சட்டத்தை எதிர்த்து தொழிலாளர்கள் போராட முன் வர வேண்டுமெனவும் இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது.