articles

‘வாழத் தகுதியற்ற இடம்’

‘வாழத் தகுதியற்ற இடம்’

காசா, அக்.19 - காசா தற்போது மக்கள் வாழத் தகுதியற்ற இடமாக மாறி விட்டது என பாலஸ்தீன மத்தியப் புள்ளியியல் துறை அறிக்கையில் குறிபிட்டுள்ளது.  காசாவில் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களால் ஏற்பட்ட பேரழிவின் முழுப் வடிவமும் வெளிவரத் தொடங்கியுள்ளன. இஸ்ரேல் ராணுவத்தால் குண்டு வீசி அழிக்கப் பட்ட காசாவை மீண்டும் கட்டி எழுப்புவதற்கு சுமார் நான்கு இலட்சத்து அறுபத்து ஆறாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் (53 பில்லியன் டாலர்கள்) தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இடைக்கால போர் நிறுத்தம் அமலாகியுள்ள நிலையில் பாலஸ்தீன மத்தியப் புள்ளியியல் துறை (PCBS) வெளியிட்ட அறிக்கையில், காசா வில் ஏற்படுத்தப்பட்டுள்ள அழிவுகள் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.  அதில் கூறப்பட்டுள்ளதாவது : காசா  பகுதியில் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 115 கட்டடங்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டுள் ளன. 3 லட்சத்து 30 ஆயிரத்து 500 க்கும்  மேற்பட்ட வீடுகள் கிட்டத்தட்ட முழுமையாகச் சேதமடைந்துள்ளன. நீர் மற்றும் கழிவுநீர் வெளி யேற்ற அமைப்புகள் சுமார் 85 சதவீதம்  சிதைக்கப்பட்டுவிட்டது. 94 சதவீத மருத்துவ மனைகள், சுகாதார நிலையங்கள் அழிக்கப் பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காசா தற்போது மக்கள் வாழத் தகுதியற்ற இடமாக மாறிவிட்டது என குறிப்பிட்டுள்ளது.  ஐ.நா அவையின் அறிக்கைகளும், காசாவில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு  அமைப்புகளும் ‘கிட்டத்தட்ட சிதைந்து விட்டது’ என்று தெரிவித்துள்ளன. அங்கே பிறக்கும்  குழந்தைகளில் ஐந்தில் ஒரு குழந்தை குறைப்பிர சவமாகவோ அல்லது எடைக் குறைவாகவோ பிறக்கின்றன. 2025 ஜூன் மாத நிலவரப்படி, 11,000 கர்ப்பிணிகள் பஞ்சத்தையும் 17,000 கர்ப்பி ணிகள் கடுமையான ஊட்டச்சத்து குறை பாட்டையும் எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது. மறுகட்டமைப்புச் செலவும் நிதிச் சிக்கல்களும் இந்த இனப்படுகொலையில் தப்பியவர்  களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பு வது மாபெரும் சவாலாக உள்ளது. காசாவின் மீது இஸ்ரேல் 2006 முதல் தொடர்ந்து தாக்கு தல் நடத்தி வருகிறது. கடந்த காலங்களில் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு பெரும்பாலும் வளைகுடா மற்றும் அரபு நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் நிதியுதவி செய்தன. ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம், உலக வங்கி ஆகியவை பிப்ரவரி 2025-இல் வெளி யிட்ட அறிக்கையின்படி, காசாவில் மீட்பு மற்றும் மறுகட்டமைப்புக்கு அடுத்த பத்து ஆண்டு களில் சுமார் நான்கு இலட்சத்து அறுபத்து ஆறாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான  பணம் தேவைப்படும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்பவும், அத்தியாவசியச் சேவைகளை மீண்டும்  உருவாக்கவும், பொருளாதார நடவடிக்கை களை உருவாக்குவதற்கு மட்டுமே ஒரு இலட்சத்து எழுபத்து ஐந்தாயிரம் கோடி ரூபாய்க்கும்  அதிகமான பணம் தேவைப்படும் ( 20 பில்லியன் டாலர்கள்) என தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த அழிவுகளை உருவாக்கிய அமெரிக்கா, இஸ்ரேல், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த செலவுகளுக்கு எகிப்து, சவூதி உள்ளிட்ட அரபு நாடுகளே பணம்  கொடுக்க வேண்டும் கூறி வருகின்றன.