52 வார தொடர் பயணத்தில் கண்டெடுத்த அரிய வரலாறு!
வரலாறு தேடி பதிவு செய்யும் அரிய பணியை இந்நூலில் செய்து உள்ளார் நூலா சிரியர். வட்டார வரலாறு என்பது ஒரு நாட்டின் வரலாற்றை எழுது வதற்கு அடிப்படைச் சான்றா கும். ஓசூர், தர்மபுரி, அரூர், கிருஷ்ணகிரி என பல வட்டாரங்கள் ஒன்றிணைந்தது தான் தகடூர் வரலாறு. தொல்பழங்கால கண்டுபிடிப்புகள் இப்பகுதியில் தொல்பழங்கால ஓவியங்கள், பாறை ஓவியங்கள், நடு கற்கள், கல்வெட்டுகள், கோட்டைகள், கற்பித்தைகள், கல் வட்டங்கள், இரும்பு செதில்கள், கோவில்கள் போன்ற பல வகை யான புதிய கண்டுபிடிப்புகளை வகைப்படுத்தி வரிசைப்படுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட வரலாறை பதிவு செய்துள்ளார்கள். கிபி பத்தாம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே இப்பகுதியில் நடு கல் நடும் பழக்கம் இருந்துள்ளது. சதி கற்கள், புலிக்குத்தி கற்கள், மாடு பிடி சண்டை நடு கற்கள் என பல வகையான நடு கற்கள் உரிய படங்களுடன் இந்நூலில் இடம் பெற்றுள்ளது சிறப்புக்குரிய தாகும். அதிசயங்கள் நிறைந்த மாவட்டம் தமிழகத்தின் முதல் பாறை ஓவியம் நல்லம்பாடியில் 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் அதிகமான நடு கற்கள், பாறை ஓவியங்கள், கோட்டைகள், மலைகள், ஆறுகள், கல்வெட்டு கள், கல்திட்டைகள் உள்ளதாக நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி கோட்டை அருகே பிதிரெட்டி என்ற ஊரின் அருகே 5 ஏக்கரில் படர்ந்து பரவி நிற்கும் அதிசய ஆலமரம் இருப்பதை பதிவு செய்துள்ளார். இந்த மரத்தின் வயது 400 வருடங்களுக்கு மேல், 2000 விடுதிகளுக்கு மேல் மரத்தை தாங்கி நிற்கின்ற அரிய வரலாற்றுச் செய்தியை வழங்கி உள்ளார். தொடர் ஆய்வுப் பயணம் 2014 ஆண்டு முதல் நூலாசிரியர் கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்டங்களில் உள்ள அரிய வரலாற்றை கண்டறிவதற்காக தொடர் பயணங்களை மேற் கொண்டுள்ளார். 52 வாரங்கள், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ச்சியாக இடைவெளி இன்றி வரலாற்று ஆய்வு பயணம் மேற்கொண்டு உள்ளார்கள். நமது வரலாற்றை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நூலை படைத்துள்ளார் நூலா சிரியர். இந்த அரிய வரலாறை பதிவு செய்த அறம் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் கிருஷ்ணனை நாம் மிகுந்த மகிழ்ச்சியோடு பாராட்ட கடமைப் பட்டுள்ளோம். இதுபோன்ற வரலாற்று ஆவ ணங்களை ஒவ்வொருவரும் படித்தறிய வேண்டியது அவசியம். வரலாற்றில் கிருஷ்ணகிரி மாவட்டம் நூலாசிரியர்: அறம் கிருஷ்ணன் வெளியீடு : அறம் பதிப்பகம், ஓசூர்-635126 விலை: ₹500 தொடர்பு: 7904509437
