இடதுசாரிகளின் எதிர்ப்பால் மோடி நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்
பாலஸ்தீனத்தின் மீதான போரை நிறுத்த வேண்டுமென்று 100க்கும் மேற்பட்ட நாடுகள் வேண்டுகோள் விடுத்தபோதும் இஸ்ரேல் உதாசீனம் செய்கிறது. ஐ.நா. கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பேசத் தொடங்கும்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர். ஆனால், நேதன்யாகு ஆணவத்தோடு இனப்படுகொலையைத் தொடர்கிறார். பிரதமர் மோடி முதலில் இஸ்ரேலை ஆதரித்தார். இடதுசாரிகளின் கடும் எதிர்ப்பு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பால் தனது நிலைபாட்டை மோடி மாற்றிக்கொண்டார். ரஷ்யா-உக்ரைன் போரில் மோடி இரட்டை வேடம் போடுகிறார். மோடி பாசிசத் தன்மையோடு இரட்டை வேடம் போட்டு உலகை ஏமாற்றுகிறார். இஸ்ரேல் ஆதிக்க அரசு பயங்கரவாதம் நடத்தி பாலஸ்தீன பூர்வகுடிகளைக் கொன்று குவிக்கிறது. சுதந்திரப் பாலஸ்தீனம் அமையட்டும். பாலஸ்தீனத்தை பிரதமர் மோடியும் அங்கீகரிக்க வேண்டும்.