அறிவைப் பெருக்கு!
நல்ல உள்ளம் கொண்டே நாமும் நன்மை செய்ய வேண்டும்! - என்றும் அல்லல் இன்றி வாழ்வ தற்கே அறிவைப் பெருக்க வேண்டும்! இனிமை யாக வாழ்க்கை வாழ இயற்கை காக்க வேண்டும் -உயர்ந்த மனித நேயும் கொண்டே நாமும் மகிழ்ச்சி காண வேண்டும்! இலக்கை நோக்கிப் பயணம் செய்ய இன்றே முயல வேண்டும்! - நாம் கலக்கம் இன்றிக் கால மெல்லாம் கல்வி கற்க வேண்டும்! ஒளியாய் எங்கும் விளங்கு தற்கே உண்மை உரைக்க வேண்டும் -எதையும் தெளிவாய் அறிந்துப் புரிந்து கொள்ளத் தீர ஆய்தல் வேண்டும்! மாசும் இல்லா மனமும் கொண்டு மகிழ்ந்து பேச வேண்டும்! - பிறர் ஏசும் படியாய் நடந்தி டாமல் எதையும் செய்தல் வேண்டும்!
