articles

img

ஸ்கேன் இந்தியா

ஸ்கேன் இந்தியா

உத்வேகம்

அரியானாவின் சட்டமன்றக் காங்கிரஸ் குழுத்தலைவராக பூபேந்தர்சிங் ஹூடாவைத் தேர்வு செய்திருக்கிறார்கள். இதற்கு ஒரு ஆண்டுகாலம் ஆகியிருக்கிறது. பெரு வெள்ளம், அதிகரிக்கும் வேலையின்மை, அர சுத்திட்டங்களில் ஓட்டைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குண்டர்கள் ஆதிக்கம், நிதி முறைகேடுகள் என்று மக்களின் துயரம் பெருகியுள்ளது. உட்கட்சிக் குழப்பம் நீடிப்ப தால் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வேலையைச் செய்யவில்லை.  லோக்தளம், ஆம் ஆத்மி, ஜேஜேபி போன்றவை தங்கள் இருப்பை உணர வைப்பதிலேயே நெருக்கடியை எதிர்கொள் கின்றன. இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி களும், விவசாயிகள் அமைப்புகளும்தான் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளைக் கையில் எடுத்து வருகின்றன என்று அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குட்டு

சாதிக்கெதிரான மனநிலையை பாடப்புத்தகங்களில் கொண்டு வாருங்கள் என்று தேசிய கல்வி மற்றும் ஆய்வுக் கவுன்சிலுக்கு(என்.சி.இ.ஆர்.டி) அலகாபாத் உயர்நீதிமன்றம் வலியுறுத்தி யுள்ளது. தற்போது சாதியை ஒரு  நெளிவு சுழிவான அமைப்பாகப் பாடத்தில் சித்தரித்தி ருக்கிறார்கள். சாதிக்குப் புகழாரம் சூட்டும் வேலையைத்தான் அதில் செய்துள்ளனர். முதல் தகவல் அறிவிக்கையில் சாதிப்பெயரை நீக்கு ங்கள் என்ற ஆணையைப் பிறப்பித்தபோதுதான் மாணவர்களுக்கு சாதிக்கொடுமை பற்றித் தெரிய வேண்டும் என்று நீதிபதி வினோத் திவாகர் கூறியுள்ளார். ஏற்கனவே 3, 6 ஆம்  வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றி விட்ட கவுன்சில், 4, 5, 7, 8க்கான பணியில் உள்ளது. இந்நிலையில்தான் உயர்நீதிமன்றத் தின் கருத்து கவுன்சிலுக்கு குட்டு வைத்திருக் கிறது. இதை கவுன்சில் மனதில் கொள்ளுமா?

போச்சு..! “

எல்லாம் போச்சு” என்று லடாக்கில் உள்ள பாஜக தலைவர்கள் புலம்பி வருகிறார்கள். 2014இல் நடந்த மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக பாஜகவுக்கு வெற்றி கிடைத்தது. ஜம்மு-காஷ்மீரி லிருந்து பிரித்து வைத்து, ஆறாவது பட்டிய லில் சேர்த்து, தனி மாநிலம் அல்லது ஒன்றிய அர சின் நேரடி ஆட்சிப்பகுதி அந்தஸ்து என்றெல் லாம் வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள். இதனால் ஏராளமானோர் பாஜகவில் இணை ந்தனர். 2004இல் எம்.பி.யாக வெற்றி பெற்றிருந்த துப்ஸ்டன் சேவாங் பாஜகவில் சேர்ந்து 2014இல் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றார். பிரிப்பதைத் தவிர லடாக் பகுதியின் உரிமை களுக்கு பாஜக எதுவும் செய்யாது என்பதால் சேவாங் கட்சியில் இருந்து விலகினார். 2024இல் பாஜகவுக்குத் தோல்வி கிடைத்தது. கிடைத்தது எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என்கிறார் இன்னும் பாஜகவில் நீடிக்கும் நந்த் குமார் சாய்.

சுமை..?

10 ஆயிரம் ரூபாய்க்குப் பெண் குழந்தையை விற்றிருக்கிறார்கள். பாஜக ஆளும் திரிபுராவில்தான் இந்த அவலம். தங்களால் இந்தக் குழந்தையை வளர்க்க முடியாது என்று கருதி பக்கத்து ஊரில் உள்ளவரிடம் விற்றனர். பத்தாயிரம் ரூபாய் என்று பேசி விட்டாலும், கூடுத லாக 1,500 ரூபாயை குழந்தை யை வாங்கியவர் தந்தாராம். இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்கதையாக மாறியுள்ளன. பெண் குழந்தைகள் குறித்த கருத்து 1990களிலும், நடப்பு நூற்றாண்டுத் தொடக்கத்திலும் மாறி வந்தது. அக்குழந்தை கள் சுமையில்லை என்ற நிலை இடது முன்னணி யின் ஆட்சியில் உருவானது. கல்வியில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்ததுதான் அதற்குக் காரணமாக இருந்தது. தற்போது மீண்டும் பழைய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.