articles

img

அனிமேஷன், அரசியல், ஜென் இசட் - சேதுசிவன்

அனிமேஷன், அரசியல், ஜென் இசட்

இன்றைய ஜென் இசட் (Gen Z) தலைமுறையினர் இணைய உலகத்திலேயே மூழ்கி சமூக அக்கறை இல்லாதவர்களாக உள்ளனர் என விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில் இந்தோனேசியாவிலும் நேபாளத்திலும் ஊழலுக்கு ஏதிராக அவர்கள் நடத்திய மாபெரும் போராட்டமானது உலக வரலாற்றில் ஒரு புதிய தடத்தை பதித்துள்ளது. 

க ஒன் பீஸ் (one piece) அனிமேஷன் (animation) தொடரில்  வரும் ‘ஜாலி ரோஜர்’ கொடியை பரவலாக ஏந்தி இருந்தனர். சொல்லப்போனால் ஜென் இசட் போராட்டக் குழுவினரின் போராட்ட சின்னமாகவே அந்த கொடி மாறிவிட்டது. ஒரு நாட்டின் ஆட்சியையே மாற்றும் சக்தி கொண்ட போரட்டத்தில் இளைஞர்கள் தங்களின் தேசிய கொடிக்கு இணையாக ஏந்தி செல்லும் வகையில் ஒரு மாற்றத்திற்கான சக்தியாகவும், நம்பிக்கையாகவும் எப்படி ஒரு அனிமேஷன் கதாபாத்திரத்தின் கொடி இவ்வளவு முக்கியத்துவம் பெற்றது? அந்த தொடரில் அப்படி என்னதான் இருக்கிறது?  இன்றைய ஜென் Z தலைமுறையினரிடம் அனிமேஷன் தொடர்கள் பார்க்கும் பழக்கம் அதிகமாகவே உள்ளது. நருடோ (Naruto), ஒன் பீஸ் (One Piece), டிமோன் ஸ்லேயர் (Demon Slayer), ஜூஜுட்சு கைசென் (Jujutsu Kaisen), அட்டாக் ஆன்  டைட்டன் (Attack On Titan) போன்ற அனிமேஷன் தொடர்கள்  பிரபலமாக உள்ளன.  இந்த அனிமேஷன் தொடர்கள் ரசிகர்களைக் கவர்வது வெறும் கலை வடிவங்கள் மட்டுமல்ல, அத்தொடர்களில் பேசப்  படும் ஆழமான, உணர்வுப் பூர்வமான கதைக்களமும் தான்.  ஒன் பீஸ் ஒன் பீஸ் (One Piece) தொடரின் முக்கிய கதாபாத்திரமான மங்கி டி. லுஃபி (Monkey D. Luffy) மற்றும் அவரது கடற்  கொள்ளை நண்பர்கள் தங்களின் “ஸ்ட்ரா ஹேட் பைரேட்ஸ்”  குழுவின் கப்பலுக்கு ஒரு கொடி வேண்டும் என உரு வாக்கிய அக்கொடி இப்போது நாடு, மொழி, இன, நிறம், கலாச்சாரங்கள் என அனைத்தையும் கடந்து ஜென் Z தலை முறையினரிடையே அநீதிகளுக்கு எதிராக உயர்த்தப்படும் ஓர் சக்திவாய்ந்த குறியீடாக வளர்ச்சி அடைந்துள்ளது. லுஃபியும் அவனது கடற்கொள்ளைக் குழுவும் வழக்கமான  கடற்கொள்ளையர்களில் இருந்து முழுக்கவே மாறுபட்ட வர்கள். அவர்கள் செல்லும் தீவுகள், கிராமங்களை அழி வுக்குள் தள்ளாமல் அங்குள்ள மக்களின் துன்பங்களை அறிந்து அதனை சரி செய்வார்கள். அதற்காக தங்கள் உயிரை யும் பொருட்படுத்தாமல் சண்டை செய்வார்கள். அக்கதையில் அரசு அங்கீகாரம் பெற்ற மிகப்பெரும் கடற் கொள்ளை குற்றவாளிகளுக்கும் அரசுக்கும் இடையிலான உறவின் பாலமாக அரசின் கடற்படை விளங்கும். கடற் கொள்ளையர்களுடன் இணக்கமாக இருப்பதுடன் கடற்படை அவர்களுக்கு பாதுகாப்பும் கொடுக்கும். இதனை பயன்படுத்தி அக்கடற்கொள்ளையர்கள் மக்களை அடக்கி ஆள்வார்கள்.  இவ்வாறான கொடுங்கோல் ஆட்சியாளர்களின் அதி காரத்தை நோக்கி கேள்வி எழுப்புவது, அந்த அதிகாரத்தை தகர்ப்பது, மக்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்பது, மனிதக்கடத்தலை தடுப்பது, இன/நிற வெறிகளுக்கு எதிராகப் போராடுவது, அதிகாரத்தில் இருப்பவர்களால் திட்டமிட்டு உரு வாக்கப்பட்ட வறுமைக்கு எதிராகப் போராடி மக்களை, கிராமங்களை காப்பாற்றுவது தான் அக்குழுவின் திட்டமிடாத முக்கிய சாகசப் பயணமாக கதை நீளுகிறது. அனிமேஷனில் கற்கும் இளைஞர்கள்  அனிமேஷன் கதாபாத்திரங்களின் ஹீரோயிசத்துடன் வெளிப்படுகிற சம்பவங்கள் சில சமயங்களில் எங்கள் சொந்த  வாழ்க்கைக்கும் வழி காட்டுகிறது என ரசிகர்கள் சொல்கி றார்கள். அதாவது அக்கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், இழப்புகள், போராட்டங்கள் தங்கள் வாழ்க்கை யுடன் ஒத்துப்போவதாகவும் போராட்டங்களை எதிர்கொள்ள வும், துக்கத்தைச் சமாளிக்கவும், பொறுமையுடன் சில விஷ யங்களைச் எதிர்கொண்டு வெற்றி பெறவும் கற்றுக்கொடுக் கின்றன. துயரங்களை எதிர்த்து கதாபாத்திரங்கள் தன்னம் பிக்கையுடன் வளர்வதைப் பார்ப்பது தைரியத்தை அளிக்கி றது. அதிகாரத்தின் தவறுகளுக்கு எதிராக கேள்விகளை எழுப்பத் தூண்டுகிறது என ரசிகர்கள் கூறுகிறார்கள்  உதாரணமாக நருட்டோ தொடரின் கதாநாயகனான நருட்டோ உசுமாகி அப்பா, அம்மா இன்றி எல்லோராலும் ஒதுக்கப்பட்ட சூழலில் தனியாக வளர்ந்து தளராமல் போராடி தனது லட்சியத்தை அடைவான். அவரது விடாமுயற்சியும், நண்பர்கள் மீதான நம்பிக்கையும் “நான் ஒருபோதும் எனது இலட்சியத்தை கைவிட மாட்டேன் அதை கடினமான உழைப்பில் எல்லோரும் என்னை அங்கீகரிக்கும் வகையில் அடைந்தே தீருவேன்” என்ற அவனது பேச்சு தன்னம்பிக்கை என்ற வலிமையான செய்தியைத் ரசிகர்களுக்கு கடத்துகிறது.  அதேபோல ஒன் பீஸ் தொடரின் கதாநாயகனாக உள்ள  மங்கி டி. லுஃபி சுதந்திரம் மற்றும் சாகசத்திற்காக வாழ்கிறான்.  அநீதிகளுக்கு எதிராக அவனது குழுவுடன் சண்டையிடுகிறான்.  குறிப்பாக அக்குழு சண்டையிட்டு மீட்கும் சில தீவுகளில் லுஃபிக்கு நண்பராக இருக்கும் நபர்களிடம் தங்கள் கப்ப லின் கொடியை கொடுத்து மீண்டும் அந்த கிராமத்திற்கு எதிரி களால் ஏதேனும் பிரச்சனை வந்தால் அதை ஏற்றவும். அப்போது இந்த கிராமத்தில் பிரச்சனை கொடுத்தால் லுஃபி குழு அவர்களை மீட்க வருவார்கள் என்ற எச்சரிக்கையாக இருக்கும். நானும் வருவேன் என்று உறுதியும் கொடுத்துச் செல்வான். இது இளம் ரசிகர்களிடையே பெரிய நம்பிக்கை யை தருகிறது. தங்களை லுஃபி-யாகவோ அல்லது தாங்க ளும் அவனுடன் பயணிப்பதாகவோ உணர்கிறார்கள்.  அனிமேஷனும் அரசியல் போராட்டங்களும்  ஒன் பீஸ் தொடரை பார்க்கும் இளைஞர்களில் பெரும்பாலா னோர் லுஃபியின் போராட்டங்கள் தற்போதைய நிஜ வாழ்க்கையில் அரசாங்கத்தின் ஊழல், அடக்குமுறை, அதி காரம், பெரும் பணக்காரர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு  தரும் ஆதரவுகள் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்க ளுடன் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். லுஃபியின் பாத்திரம் மூலம் பெற்ற உணர்வுகள், ஊழல், கொடுமைகள், அரசின் பாரபட்சம் உள்ளிட்ட அநீதிகளுக்கு எதி ராகத் துணிந்து போராட வேண்டும் என்ற உணர்வை அவர்களுக்கு கொடுத்துள்ளது.  இதன் வெளிப்பாடாகத்தான் அநீதி நடக்கும் இடங்களில் லுஃபி வருவான், நாங்களும் லுஃபி போல அதிகாரத்தை கேள்வி கேட்போம். மக்களுக்கு எதிரான ஆட்சியை அகற்றப்  போராடுவோம் என்ற தகவலை தெரிவிக்கும் வகையில் பல  நாடுகளில் நடக்கும் போராட்டத்தில் ஒன்‌ பீஸ் கொடி உயர்த்தப்பட்டுள்ளது என்கிறார்கள் அனிமேஷன் ரசிகர்கள். மேலும் வாழ்க்கையை வெறுத்துப் போனவர்கள் கூட லுஃபி  கதாபாத்திரத்தின் வழியாக தன்னம்பிக்கை, தைரியம் போரா ட்டக்குணம் ஆகியவற்றை பெறுவதாக தெரிவித்துள்ளனர்.  அக்கதாபாத்திரமும் அவனது குழுவும் ஒருபோதும் கொடுங்கோலர்களுடன் சமரசம் செய்வதில்லை. அவர்கள் சுதந்திரத்திற்காகப் போராடுகிறார்கள். அப்பாவி மக்களைப் பாதுகாக்கிறார்கள். ஊழல் நிறைந்த அதிகாரிகளுக்கு எதி ராகப் போராடி அவர்களை வீழ்த்துகிறார்கள். திறமையற்ற தலைவர்கள், வாரிசு அரசியல் அமைப்புகள் மற்றும் நிறை வேறாத வாக்குறுதிகளால் தங்கள் எதிர்காலம் அழிக்கப்படு வதை உணரும் இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு அந்த கதாபாத்திரத்தை தங்கள் விடுதலைக்கான ஹீரோவாக ஏற்றுகொள்ள போதுமானதாக உள்ளது என கூறுகிறார்கள்.  இந்தோனேசியாவில்  இதன் வெளிப்பாடகத்தான் இந்தோனேசியாவில் அந்  நாட்டின் ஜனாதிபதி பிரபோவோ சுபியாந்தோவின் அரசாங் கத்தின் தலைமையில் அதிகரித்து வரும் வரிகள், ஊழல் மற்றும் மக்கள் பிரச்சனைகளில் ராணுவத்தின் தலையீடு ஆகிய வற்றை பொறுத்துக்கொள்ளாமல் போராடிய இளைஞர்கள் தேசியக் கொடியுடன் ஒன் பீஸ் கொடியையும் ஏந்தினர்.  புதிய தலைமுறையினருக்கு மட்டுமே அக்கொடி அறி முகமாகி இருந்த காரணத்தால் முதலில் காவலர்கள் இதனை  கண்டுகொள்ளவில்லை பிறகு காவல்துறை அக்கொடிகளைப் பறிமுதல் செய்யத் துவங்கியது. மேலும் “தேசத்துரோக” வழக்கு கள் பதியப்படும் என மிரட்டல் விடுக்க துவங்கியது. எனினும்  அதன் பிறகு அந்த கொடியை ஏந்தி போராடும் இளை ஞர்களின் வேகமும் தீவிரமும் அதிகரித்தது.  இவ்வாறு தான் நேபாளத்திலும் ஊழல் உள்ளிட்ட பல  பிரச்சனைகளுக்கு எதிராக போராடிய ஜென் இசட் தலை முறையினர் ஒன் பீஸ் கொடியை அவர்களின் அதிகாரப்பூர்வ மான கொடியாக ஏந்தி போராட்டம் நடத்தினர்.  பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராடுபவர்களும் “லுஃபி  பாலஸ்தீனத்தை விடுவிப்பான்” என்று எழுதப்பட்ட டி-ஷர்ட்களை அணிந்து அக்கொடியை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.  மக்களை கைவிட்டு ஊழலால் புரையோடிப்போன ஆட்சி களுக்கு எதிராக போராட்டக்களம் காணும் இத்தலைமுறை இளைஞர்கள் ஒன் பீஸ் கொடியை உயர்த்தும்போது அனி மேஷன் மீதான ஆர்வத்தையும் தாண்டி ஊழல் நிறைந்த அதிகார வர்க்கத்தினரால் தங்கள் எதிர்காலம் திருடப்படுவதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று முக்கியமான கருத்தையும் பிரகடனம் செய்கிறார்கள்.  இவ்வாறு ஜென் இசட் தங்கள் உரிமைகளுக்காகப் போராட  தாங்களாகவே ஒரு அடையாளத்தை கண்டுபிடித்துள்ளனர்.  இந்தியாவில் அனிமேஷன்  ரசிகர்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டும் அல்ல அவர்கள் அனிமேஷனுக்குள் வாழ்கின்றனர். பிற நாடு களை போலவே அனிமேஷன் இந்தியர்களிடமும் புதிய கலாச்சார அடையாளமாக மாறியுள்ளது. இந்தியா முழு வதும் அனிமேஷன் கிளப்புகள் மற்றும் மாநாடுகள் உருவாகி யுள்ளன. உதாரணமாக, 2006-இல் பெங்களூரு அனி மேஷன் கிளப் துவங்கியது, இப்போது வாட்ஸ்அப் மற்றும் டிஸ்கார்ட் செயலியில் குழுக்கள் மூலம் தொடர்களை திரையிடு வது, உரையாடல், போட்டிகளை நடத்துகிறார்கள். பெங்களூருவில் நடைபெறும் ஜப்பான் ஹப்பா (Japan Habba) போன்ற பெரிய நிகழ்வுகளில் அனிமேஷன் திரை யிடல், இசை மற்றும் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த அனி மேஷன் கதாபாத்திரத்தின் உடை அணிந்து பங்கேற்கின்றனர் (cosplay).  பிரபலமான அனிமேஷன் தளமான க்ரஞ்ச்ரோல் (Crunchyroll) இந்தியாவைத் தனது இரண்டாவது மிகப்பெரிய  சந்தை என்று அறிவித்துள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது.