articles

img

வரதட்சணைக்கு எதிரான குரல் பெண் சமத்துவத்திற்கான முழக்கம் - கே.பாலகிருஷ்ணன்

வரதட்சணைக்கு எதிரான குரல் பெண் சமத்துவத்திற்கான முழக்கம்

நாள்தோறும் பல்வேறு அரசியல் பிரச்ச னைகள் எழுந்தா லும், அப்பிரச்சனைகள் அனைத்தி லும் ஆக்கப்பூர்வமான முறையில் பாட்டாளி வர்க்கத்தின் இதயத்துடி ப்பாக தலையிட்டுக் கொண்டே இருக்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மற்ற பல்வேறு இயக்கங்கள் கண்டும் காணாமல் கடந்து சென்று விடுகிற மிக முக்கிய சமூகப் பிரச்ச னையாம் வரதட்சணை கொடுமை யையும் முதன்மையான பிரச்சனை யாக முன்னிறுத்தி, மாநில அளவில் ஒரு சிறப்பு மாநாட்டினை நடத்துகிறது.  செப்டம்பர் 9 (செவ்வாய்) அன்று  திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத் தில் வரதட்சணை ஒழிப்பு மாநில சிறப்பு மாநாட்டை மார்க்சிஸ்ட் கட்சி விரி வான முறையில் ஏற்பாடு செய்து நடத்து கிறது. இதையொட்டி, தமிழ்நாடு முழு வதும் வரதட்சணை கொடுமையை யும் மிகப் பெரும் சமூக புற்றுநோயாக வளர்ந்து நிற்கிற - எண்ணற்ற இளம் மகள்களின் உயிரைப் பறித்துக் கொண்டிருக்கிற இக்கொடுமைக்கு காரணமாக உள்ள முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் உண்மை முகத்தையும் அம்பலப்படு த்துகிற; சட்டத் தீர்வுகளையும், சமூக விழிப்புணர்வையும் மக்களிடையே கொண்டு செல்லும் விதமாக தீக்கதிர் நாளிதழ், வரதட்சணை ஒழிப்பு சிறப்பிதழை வெளியிடுகிறது.  சமூக சீர்திருத்தத்தை முன்வைப்ப தல்ல; மாறாக, சமூக மாற்றத்தை முன்வைக்கிற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நீண்ட நெடிய வர்க்கப் போராட்டத்தின் பயணத்தில், வர தட்சணை ஒழிப்பு எனும் முழக்க மும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தாகும்.  எத்தனையெத்தனை மகள்கள்!  சமீபத்தில் தமிழ்நாட்டை உலுக்கிய திருப்பூர் ரிதன்யா முதல் தேசத்தின் தலைநகர் பிரதேசத்தையே உலுக்கிய நொய்டாவைச் சேர்ந்த நிக்கி வரை யில் எத்தனை எத்தனை மகள்களை, வரதட்சணை கொடுமையின் பிடியில் இந்த தேசம் காவு கொடுக்கிறது!. இனி மையாகச் செல்ல வேண்டிய இல்லற வாழ்க்கை எனும் கனவை வரதட்சணை பயங்கரம் பொசுக்கி விடு கிறது. வரதட்சணையை முன்வைத்து குடும்பங்களுக்குள் பெண்கள் மீது  ஏவப்படுகிற எண்ணற்ற வகை யிலான வன்கொடுமைகளை, இச்சமூகம் ஒரு பொருட்டாகக்கூட எடுத்துக் கொள்ளாமல், கடந்து செல்வது முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ சமூகத்தின் உண்மை முகத்தை; வர்ணாசிரம அதர்மத்தால் கட்ட மைக்கப்பட்டுள்ள கொடிய முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது என்றால் மிகையல்ல.  மநு அநீதியின் கொடிய சிந்தனைகள் வரதட்சணை கொடுமைகளை தடுப்பதற்காக பல்வேறு சட்டங்கள் அமலில் இருந்தாலும், அவை முறை யாக அமலாக்கப்படவில்லை; நாளுக்கு நாள் வரதட்சணை கொடு மைகளும் அதனால் ஏற்படும் மரண ங்களும் அதிகரிக்கவே செய்துள்ளன என்பதே உண்மை. சட்டங்கள் இருந்தாலும், இந்த கொடுமையை ஏன் தடுக்க முடியவில்லை என்றால், இது வெறுமனே ஒரு சட்டப் பிரச்ச னை மட்டுமல்ல; சமூகத்தில் புரை யோடிப் போயிருக்கிற மிக முக்கிய பிரச்சனை என்பதால்தான்.  வரதட்சணை என்பது, மநு அதர்மத்தால் வழிநடத்தப்படுகிற பிராமணிய சமூகப் பொருளாதார கட்ட மைப்பின் தவிர்க்க முடியாத விதிகளில் ஒன்றாக இருக்கிறது என்பதுதான் அடிப்படையான பிரச்சனை. மநு  அதர்மம் உருவாக்கியுள்ள விதிகளின் படி, எட்டு வகையான திருமணங்களில் பிரம்ம, தைவ, அர்ஷ, ப்ரஜாபத்ய - என்ற நான்கு வகையான திரு மணச் சடங்குகளைத்தான்  பிராமணர் களுக்கு உகந்தது என்று கூறப்பட்டுள் ளது. இவை நான்குமே வரதட்சணை தருகிற, பெறுகிற திருமண முறைகள் ஆகும்.  எஞ்சியுள்ள நான்கு வகை திரும ணங்கள், பெண்ணை திருமணம் செய்வதற்கு, மணமகனிடமிருந்து பணம் மற்றும் செல்வங்களைப் பெற்றுக் கொள்கிற - அதாவது, மண மகளுக்கு மணமகன் வீட்டார் விலை நிர்ணயித்து கொடுக்கும் முறையை கொண்டவை; இவை, சமூகத்தில் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த வர்கள் செய்கிற திருமண முறைகள் என்று மநு அதர்மம் விதிகளை வகுத்துள்ளது.  மேற்கண்ட மநுவின் விதிகளின் படி, பிராமணிய சமூகங்கள் வரதட்ச ணையை வலுவாக முன்னிறுத்து கின்றன. அவர்கள் பெண்களை சுதந்திரமான, தனித்துவமிக்க மனி தர்களாக அங்கீகரிப்பது இல்லை.  அவர்களது திருமண முறையே சொத்துக்களைப் போல பெண்ணை யும் தானம் செய்வது - அதாவது கன்னிகா தானம் என்ற முறையாகவே இருக்கிறது. பெண்ணுடன் சேர்த்து பல வகையான சொத்துக்களையும் மணமகனுக்கு அளித்து, அத்துடன் பெண்ணை கைவிட்டு விடுவது என்பதுதான் இதன் நடைமுறை. அதன்பின்னர், அப்பெண்ணுக்கு கண வனையும், அவனது குடும்பத்தாரை யும் கவனித்துக் கொள்வதை தவிர வேறு எந்த வேலையும் இருக்கக் கூடாது.  இதற்கு மாறாக, தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களின் திருமண முறைகளில் மணமகளுக்கு மணமகன் பணம் மற்றும் செல்வங் களை அளித்து திருமணம் செய்வது என மநுவின் விதிகளில் கூறப்பட்டி ருந்தாலும், இது காலப்போக்கில் ஒட்டுமொத்த சமூகமும் பிராமணிய மயத்தின் ஆதிக்கம் காரணமாக, பிராமணிய சமூகங்களின் திருமண முறைகளைப் போலவே மணமக னுக்கு பெண்ணுடன் சேர்த்து பொருள்களையும் சொத்துக்களையும் அளிப்பதாக மாறியது.  பிராமணியத்தின் விதிகளே...! ஒட்டுமொத்தத்தில், திருமணங் கள் என்றாலே அது பணம், பொருள்,  செல்வம் சம்பந்தப்பட்டது என்றும்; பெண் என்பவர் சொத்து சம்பந்தப் பட்டவர் என்றும்தான் மநு அநீதி வரை யறுக்கிறது. இந்திய சாதிய சமூக கட்டமைப்பில், எண்ணற்ற சாதிகள் இருந்தாலும், அநேகமாக அனைத்து சாதிகளிலும் மேற்கண்ட மநு அநீதி யின் விதிகள் - குறிப்பாக, பெண்ணை  சொத்தாக பார்ப்பது, பெண்ணை முன்னிறுத்தி பணத்தையும் செல்வங் களையும் கைப்பற்றுவது, குவிப்பது பரிமாறுவது - என பிராமணியத்தின் விதிகளே வலுவாக நிலைநாட்டப் பட்டுள்ளன. காலங்கள் மாறினாலும், நவீன, விஞ்ஞான, தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும், இந்திய சமூக கட்ட மைப்பு என்பது மேலும் மேலும் பிற் போக்குத்தனம் கெட்டிப்பட்டதாக; மேலும் மேலும் பிராமணிய - மநு  அநீதி கோட்பாடுகள் வலுவாக அம லாக்கப்படுவதாக மாற்றப்படுகிறது. இது, இத்தகைய பிராமணிய - சாதிய கட்டமைப்புடன் வலுவாக பிணைக்கப் பட்டு வளர்ந்திருக்கிற இந்திய முத லாளித்துவ - நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு முறை நீடிப்பதற்கு மிகவும் அவசியமானதாகும்.  இந்த சமூக அமைப்பானது, பெண்களை முற்றிலும் அடிமைப் படுத்தி வைத்துள்ள சமூக அமைப்பு  ஆகும். வர்ணாசிரம அதர்மத்தின் அடிப்படையிலும், பிராமணிய - சாதிய கட்டமைப்பின் அடிப்படை யிலும் இயங்குகிற இந்த சமூக  அமைப்பில், பெண்களை அடிமை களாக வைத்திருக்க வேண்டும் என்பதே மநுவின் விதி. அதையே சமூகத்தின் முதன்மை விதியாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றன இன்றைய ஆர்எஸ்எஸ் - பாஜக அமைப்புகளும், அதன் தலைமையி லான அரசும். இவர்களைப் பொறுத்த வரை, பெண்கள் கல்வி கற்கக் கூடாது, வேலைக்குச் செல்லக் கூடாது, சுயமாக சம்பாதிக்க கூடாது,  பிறப்பு முதல் இறப்பு வரை ஆணைச் சார்ந்தே வாழ வேண்டும், எவ்வித மான சுதந்திரமும் கூடாது என்பது தான்.  “பெண்கள் குழந்தையாக இருக்கும் போது தந்தையின் கட்டுப் பாட்டிலும், திருமணமான பின் கண வனின் கட்டுப்பாட்டிலும், கணவன் இறந்த பிறகு மகன்களின் கட்டுப்பாட்டி லும் இருக்க வேண்டுமே தவிர, தாங்கள் விரும்பும்படி ஒரு போதும் இருக்கக்கூடாது” என்று மநு தனது விதிகளில் எழுதியுள்ளார். மேலும் இது போல, ஆண் வாரிசுகளை பெற்றுக் கொள்வதற்காகவே பெண் என்றும்  குழந்தை பெறும் இயந்திரமே தவிர, வேறு அல்ல என்ற முறையிலும் மநு வின் விதிகள் பெண்ணை, ஆணுக்கு  கட்டுப்பட்டு நடக்கும் ஒரு பொருளாக மட்டுமே சித்தரிக்கின்றன. இதுதான் இந்திய திருமண முறைகளிலும் கட்ட மைக்கப்பட்டுள்ளது. இந்த முறை களின் ஒரு முதன்மையான வடிவம் தான் வரதட்சணை. இருமுனை போராட்டம் எனவே வரதட்சணை எனும் பயங்கர சமூக கொடுமையானது, சட்டங்களால் மட்டுமே தீர்க்கப்படு கிற பிரச்சனை அல்ல. வரதட்சணை யால் நடத்தப்படுகிற வன்கொடுமை கள், குடும்ப வன்முறைகள், படு கொலைகள் உள்ளிட்ட குற்றச் செயல் களுக்கு, தற்போதுள்ள சட்டங்கள் மூல மாக கடுமையான தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும்; அதற்கான போராட்டங்களை நாம் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.   இத்தகைய சட்டப் போராட்டத்தில்  அனைத்து தரப்பு மக்களையும் இணைக்க வேண்டும். அதில் ஆண் களும், இளைஞர்களும் முன்னணி யில் நிற்கச் செய்ய வேண்டும். தற்போ தைய நிலையில், வரதட்சணை கார ணமாக கொலைகள் உள்ளிட்ட குற்றங்கள் நடக்கும் போது மட்டும் அது சட்டத்தின் பார்வைக்கு வரு கிறது; மாறாக வரதட்சணையே ஒரு  குற்றம்தான் என்ற பார்வை பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதை சமூகப் போராட்டங்களில் முதன்மையான போராட்டமாக கம்யூனிஸ்ட் இயக்கம் முன்னெடுக்கிறது. அனைத்து அர சியல் இயக்கங்களும் முன்னெடுக்க வேண்டும்.  அதே வேளையில், வரதட்சணை கொடுமைக்கு காரணமான சமூக கட்டமைப்பை தகர்த்து, புரட்சிகரமான - பெண்ணுக்கு சம உரிமையும் சம அந்தஸ்தும் அனைத்துவிதமான சுதந்திரங்களையும் உறுதி செய்கிற புதியதோர் சமூகத்தை படைப்பதை நோக்கி கம்யூனிஸ்ட்கள் எண்ணற்ற போராட்டங்களை நடத்தி வரு கிறோம். இந்த மாபெரும் பயணத்தின் ஒரு மைல் கல்லாக - பெண் விடுதலை யின் உரத்த குரலின் ஒரு பகுதியாக திருவள்ளூர் செங்குன்றத்தில் நடைபெறும் வரதட்சணை ஒழிப்பு சிறப்பு மாநாடு வெல்லட்டும்!