articles

79ஆவது சுதந்திர தினமும், இந்தியக் குடிமக்களின் கடமையும் ச.வீரமணி

79ஆவது சுதந்திர தினமும், இந்தியக் குடிமக்களின் கடமையும்

நாட்டின் 79ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடியிருக்கும் சமயத்தில், நாம் நம் அரசியல் நிர்ணயசபையில் நடை பெற்ற விவாதங்களை மீண்டும் வாசிப்பது மிகவும் பயன் அளித்திடும். அரசியல் நிர்ணயசபையில் அங்கம் வகித்தவர்களில் பிரதானமானவர்கள், இந்திய சுதந்திரப்போராட்டத்தில் பங்கெ டுத்துக்கொண்டவர்கள். இவர்கள் அனைவ ருமே நம் வரலாற்றையும், சமூக எதார்த்த நிலைமை களையும், பண்பாட்டுப் பாரம்பரியங்களையும், மனிதகுல முன்னேற்றத்தையும் மற்றும் சமகால உலக நடப்புகளையும் ஆழமாகப் பற்றிக்கொண்டி ருந்தவர்களாவர்.

அரசியல் நிர்ணயசபையின் வரலாற்றுச் சவால்

 அவர்கள் முன் இருந்த வரலாற்றுச் சவால் இரண்டு முக்கிய கேள்விகளால் உருவாக்கப்பட்டது. மாபெரும் மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டில், பல்வேறு பண்பாடுகள், பல்வேறு பன்முகத்தன்மை கள் கொண்ட ஒரு நாட்டில் அனைத்துத்தரப்பின ரையும் ஒன்றுபடுத்தி முற்போக்கான அரசை எவ்வாறு உருவாக்குவது என்பதேயாகும். அனைத்தையும் அலசி ஆராய்ந்து அவர்கள் ஒரு நிகரற்ற தீர்வைக் கண்டுபிடித்தார்கள். அதாவது, அனைத்துத்தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் குடியுரிமையை உருவாக்கினார்கள். சுதந்திர இந்தியா, அனைத்து பன்முகத் தன்மைகளையும் கடந்து, அனைவருக்கும் பொது வான மற்றும் சம குடியுரிமையைக் கொண்டிருக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

அரசமைப்புச்சட்டத்தின் முகப்புரை

இதனைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட அரச மைப்புச்சட்டத்தின் முகப்புரை இந்தக் கருத்திய லுக்கு வலுசேர்க்கும் விதத்தில் அமைந்தது. முகப்புரையில் கூறப்பட்டிருப்பதாவது: “இந்திய மக்களாகிய நாங்கள், இந்தியாவை ஓர் இறையாண்மைமிக்க, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக உருவாக்கவும், அதன் குடிமக்கள் அனைவருக்கும் சமூக நீதி, பொருளா தார நீதி மற்றும் அரசியல் நீதி கிடைத்திடவும், சிந்த னைச் சுதந்திரம், சிந்தனையை வெளிப்படுத்தும் சுதந்திரம், விரும்பும் கடவுளை வழிபடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை வழங்கிடவும், சமூக அந்த ஸ்து மற்றும் வாய்ப்பில் சமத்துவம் மற்றும் அனை த்துத் தரப்பினர் மத்தியிலும் சகோதரத்துவத்தை மேம்படுத்திடவும், தனிநபரின் கண்ணியம் மற்றும் தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை உறுதி செய்திடவும், 1949 நவம்பர் 26 அன்று எங்கள் அரசியல் நிர்ணயசபையில் இதன்மூலம், எங்களுக்கு நாங்களே இந்த அரசமைப்புச்சட்டத்தை ஏற்றுக்கொண்டு, சட்டமியற்றுகிறோம்.”

நாடாளுமன்ற அரசமைப்பு

முகப்புரையின் தொலைநோக்குப் பார்வையை எதார்த்தமாக்கிட, ஒவ்வொரு குடிமகனும் தனக்கு  அளிக்கப்பட்டுள்ள வாக்குரிமை மூலமாக, தான்  பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அரசாங்கத்தை அமைப்பதற்கான உணர்வைப் பகிர்ந்துகொள்ளும் விதத்தில் ஒரு ஜனநாயக அமைப்பை உறுதி செய்வது இயல்பானது. இந்தியாவிற்கு பொருத்த மான அரசாங்க வடிவம் குடியரசுத் தலைவர் வடிவமாக இருக்காது, மாறாக நாடாளுமன்ற வடிவ அரசாங்கத்திற்குள் ஓர் அமைச்சரவை அமைப்பாக இருக்கும் என்று அரசமைப்புச்சட்டத்தை உருவாக்கியவர்கள் முடிவு செய்ததை அரசியல் நிர்ணயசபை விவாதங்கள் தெளிவுபடுத்துகின்றன. அதன்படி, அரசமைப்புச்சட்டம், கூட்டாட்சி அமைப்பைக் கொண்ட, சில ஒற்றையாட்சி அம்சங்க ளுடன் கொண்ட ஒரு நாடாளுமன்ற வடிவ அரசாங் கத்தை நிறுவியது. ஒன்றியத்தின் நிர்வாகக் குழுவின்  அரசமைப்புத் தலைவர் குடியரசுத் தலைவராவார். இந்திய அரசமைப்புச்சட்டத்தின் 79ஆவது பிரிவின் படி, நாடாளுமன்றம் குடியரசுத் தலைவர் மற்றும் மாநிலங்களவை மற்றும் மக்களவை என இரு அவைகளைக் கொண்டிருக்கும்.

உலகளாவிய வாக்குரிமை

நாடாளுமன்ற அமைப்புமுறையை ஏற்றுக்கொள் வதன் மூலம், அரசமைப்புச்சட்டம் தேர்தல் செயல் முறையை விரிவுபடுத்தி, யாரும் விலக்கப்படாமல், வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமையை உறுதி செய்தது. இந்தச் சூழலில், 326ஆவது பிரிவு சேர்க்கப் பட்டது. அது கூறுவதாவது: “மக்களவைக்கும் ஒவ்வொரு மாநிலத்தின் சட்டமன்ற பேரவைக்கும் தேர்தல்கள், வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில் இருக்கும். அதாவது, இந்தியக் குடி மகனாக இருக்கும் ஒவ்வொரு நபரும், பொருத்த மான சட்டமன்றத்தால் உருவாக்கப்பட்ட எந்தவொரு சட்டத்தின் கீழும் அல்லது அதன் சார்பாக நிர்ண யிக்கப்பட்ட தேதியில் பதினெட்டு வயதுக்குக் குறை யாதவராகவும், இந்த அரசமைப்பின் கீழோ அல்லது பொருத்தமான சட்டமன்றத்தால் உருவாக்கப்பட்ட எந்தவொரு சட்டத்தின் கீழோ வசிக்காமை, மன நிலை சரியில்லாத தன்மை, குற்றம் அல்லது ஊழல் அல்லது சட்டவிரோத நடைமுறை காரணமாக வேறு விதமாக தகுதி நீக்கம் செய்யப்படாமலும் இருந்தால், அத்தகைய நபர் எந்தவொரு தேர்தலிலும் வாக்காள ராகப் பதிவு செய்ய உரிமை உண்டு.” பின்னர் உச்சநீதிமன்றம் இந்த உலகளாவிய தன்மையை வலுப்படுத்தி, வாக்களிக்கும் உரிமை அரசமைப்புச்சட்ட உரிமை என்பதை உறுதிப் படுத்தியது.

சுதந்திரமான தேர்தல் ஆணையம்

மேலும், அரசியல் கட்சிகள் மற்றும் ஆட்சிபுரி வோர் செல்வாக்கிலிருந்து விடுபட்ட ஒரு வலுவான மற்றும் சுதந்திரமான தேர்தல் ஆணையத்தை அரச மைப்புச்சட்டம் வழங்கியுள்ளது. தேர்தல்கள் அனை வருக்கும் சமமான முறையில் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்கும், அவ்வாறு தோன்றுவதற்கும் இது அவசியமாகும்.  அதன்படி, 324ஆவது பிரிவு கூறுவதாவது: “நாடாளுமன்றம் மற்றும் ஒவ்வொரு மாநிலத்தின் சட்டமன்றத்திற்கும் நடைபெறும் அனைத்து தேர்தல்களுக்கும், இந்த அரசமைப்புச்சட்டத்தின் கீழ் நடைபெறும் குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல்களு க்கும் வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதற்கும், நடத் துவதற்கும் மேற்பார்வை, வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடு தேர்தல் ஆணையத்திடம் இருக்கும்.” தேர்தல் ஆணையம் தலைமைத் தேர்தல் ஆணை யரையும், குடியரசுத் தலைவர் அவ்வப்போது நிர்ண யிக்கும் பிற தேர்தல் ஆணையர்களையும் கொண்டி ருக்கும். மேலும் உச்சநீதிமன்ற நீதிபதியைப் போன்றே தலைமைத் தேர்தல் ஆணையரும் பதவியி லிருந்து நீக்கப்பட மாட்டார்.

 அரசமைப்புச் சட்டத்தின்  உலகளாவிய தன்மை

இவ்வாறு நம் அரசமைப்புச்சட்டத்தின் கட்டமை ப்பு உலகளாவிய தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. குடியுரிமை இல்லாதது மட்டுமே விதிவிலக்கு. மேலும் தகுதியை நிர்ணயிக்கும் பொறுப்பு தேர்தல் ஆணையத்திடம் இல்லை.  அதன் தொடக்கத்திலிருந்தே, தேர்தல் ஆணை யம், முதல் தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத் தப்பட்ட இரண்டு அடிப்படைக் கொள்கைகளின் அடிப்படையில் செயல்பட்டது:  1. தேர்தல்கள் அனைவருக்கும் வாக்குரிமை என்ற தன்மையை உறுதி செய்ய வேண்டும்.  2. வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான பொறுப்பு தனிப்பட்ட குடிமகனை மட்டுமே சார்ந்தி ருக்கக்கூடாது.

இன்றைய பெரும் சர்ச்சை

இருப்பினும், இப்போது ஒரு பெரிய சர்ச்சை எழுந்துள்ளது. அதன் வேர்கள் அரசாங்கத்தின் புதிய கொள்கைகளில் உள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) தொடங்கி அதைத் தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC).  குடியுரிமை திருத்தச் சட்டம், மக்களை மத அடிப்ப டையில் பாகுபாடு காட்டி பிளவுபடுத்துவதாக பரவ லாக எதிர்ப்பு எழுந்தது. சட்டமாக நிறைவேற்றப்பட்டி ருந்தபோதிலும், அது இன்னும் அறிவிக்கப்பட வில்லை. மேலும் தேசிய குடிமக்கள் பதிவேடு செயல் முறையும் ஸ்தம்பித்துள்ளது.  இந்த இரண்டு நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பின்  மையத்தில் இருக்கும் அச்சம் என்னவென்றால், இவை அரசமைப்புச்சட்டத்தில் பொதிந்துள்ள பொது வான மற்றும் சம குடியுரிமையின் அடிப்படைக் கொள்கையை மீறுவதாகும்

வரலாற்றுச் சூழலும்  ஆர்எஸ்எஸ்-இன் பங்கும்

இந்தப் பின்னணியில் வரலாற்றுச் சூழலையும் ஆர்எஸ்எஸ்-இன் பங்களிப்பையும் பார்ப்பது அவசி யமாகும். ஆர்எஸ்எஸ், அதன் தொடக்கத்திலிருந்தே அரசமைப்புச்சட்டத்தையும், ஜனநாயக, மதச் சார்பற்ற குடியரசையும் ஏற்க மறுத்துவிட்டது.  இந்து ராஷ்டிரா சித்தாந்தத்தில் வேரூன்றிய இது, பாகிஸ்தானின் இஸ்லாமிய அரசு உருவாக்கத்தை நெறிப்படுத்திய இஸ்லாமிய தேசியவாதத்தின் பிரதிபலிப்பாக இருந்தது. மத அடையாளத்தை அடிப்படையாகக் கொண்ட தேசம் மற்றும் அரசு ஆகிய இரண்டு கண்ணோட்டங்களுமே பிரிட்டிஷ் காலனித்துவக் கொள்கையான “பிரித்தாளும் கொள்கையின்” நேரடி விளைபொருட்களாகும். பிரிட்டிஷ் காலனித்துவ வரலாற்றாசிரியர்கள் இந்தியாவின் கடந்த காலத்தை இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பிரத்தியேக மோதலின் ஒரு கதையாகவே முன்வைத்தனர். மத அடையாளத்தால் இயக்கப்படும் தேசியவாதங்க ளின் எழுச்சியால் வலுப்படுத்தப்பட்ட இந்த சிதைந்த வரலாறு இறுதியில் பிரிவினைக்கு வழிவகுத்தது. இதன் விளைவாக இந்தியாவின் சுதந்திரத்தின் முக்கியத்துவம் குறைந்து, நீங்காத வடுவை விட்டுச் சென்றது.

அரசியல் நிர்ணயசபையின் பொறுப்பு

அரசமைப்புச்சட்டத்தை உருவாக்கிய சிற்பிகள் இந்தப் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை மாற்றிய மைக்கக் கடமைப்பட்டிருந்தனர். சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளுக்குப் பிறகும், ஜனநாயக,  மதச்சார்பற்ற குடியரசுக்கு மாற்றாக இந்து ராஷ்டிரம் என்ற அதன் குறுகிய, மதவெறி, பாசிசக் கண்ணோட் டத்தை ஆர்எஸ்எஸ் தொடர்ந்து பின்பற்றுகிறது.  அவர்களின் நச்சுத்தன்மை வாய்ந்த வெறித்த னம் இந்த அளவுக்கு சென்றுள்ளது - ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்துடன் இணைந்த ஓர் ஆளுநர் ஆகஸ்ட் 14 அன்று கேரளாவில் “பிரிவினை தினத்தை” அதிகா ரப்பூர்வமாகக் கொண்டாட வலியுறுத்தியுள்ளார்.

கார்ப்பரேட்-மதவெறி கூட்டணி

இன்று, தற்போதைய அரசாங்கத்தை இயக்கும் கார்ப்பரேட்-மதவெறி கூட்டணியின் முன்னணியில் ஆர்எஸ்எஸ் நிற்கிறது. இது சுதந்திரமான அரச மைப்புச்சட்ட அதிகாரிகளை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கவிழ்க்க முயற்சிக்கும் நவ-பாசிச போக்குகளின் ஊற்றுக்கண்ணாகும்.  பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) செயல்பாட்டில் குடியுரிமைக் கேள்வியை வாக்களிக்கும் உரிமையுடன் இணைக்க முயற்சிப்பதில் தேர்தல் ஆணையத்தின் வஞ்சகத்த னம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இந்த முயற்சியை நாடு முழுவதும் பரப்பும் திட்டமும் வகுக்கப் பட்டுள்ளது.

இந்த சுதந்திர தினத்தின்  போர் முழக்கம்

எனவே, இந்த சுதந்திர தினத்தில், நாம் கொண்டாட வேண்டியது - குடியுரிமையைப் பாது காப்பதற்காக; ‘பொதுவான மற்றும் சம குடியுரிமை’ என்ற கொள்கையைப் பாதுகாப்பதற்காக; ஜனநாய கம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி மற்றும் நமது ‘வேற்றுமையில் ஒற்றுமை’ ஆகியவற்றைப் பாது காப்பதற்காக - எனும் முழக்கங்களையே! இதுவே இந்த சுதந்திர தினத்தில் நமது போர் முழக்கமாக இருக்கட்டும்.