விழுப்புரம் மாவட்டத்தில் 210 தீக்கதிர் சந்தா வழங்கல்
விழுப்புரம் மாவட்டத்தில் தீக்கதிர் சந்தா இயக்கம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 510 சந்தாக்கள் பதிவு செய்துள்ளனர். சந்தாக்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர் ஆகிய இடைக்குழுக்கள் மற்றும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் வழங்கிய 210 தீக்கதிர் சந்தா தொகை ரூ. 4 லட்சத்து 56 ஆயிரத்தை தீக்கதிர் முதன்மை பொது மேலாளர் எம்.பாண்டி, மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கீதா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், எஸ்.முத்துக்குமரன், ஏ.சங்கரன், ஆர்.மூர்த்தி, ஆர்.டி.முருகன்,இடைக்குழு செயலாளர்கள் விழுப்புரம் ஆர்.கண்ணப்பன், திருவெண்ணெய்நல்லூர் கே.சிவக்குமார், விக்கிரவாண்டி ஆர்.கிருஷ்ணராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் கே.வீரமணி மற்றும் எஸ்.அபிமன்னன் ஆகியோர் கலந்துகொண்டனர்.