districts

img

தஞ்சை தியாகி எஸ்.ஜி.முருகையன் நினைவை போற்றுவோம்

திருவாரூர் மாவட்டம் (அன்றைய கீழத்தஞ்சை  மாவட்டம்) கோட்டூர் ஒன்றியத் தில் உள்ள சித்தமல்லி கிராமத் தில் கோவிந்தன் தங்கச்சியம் மாள் ஆகியோருக்கு மகனாக 1931-ஆம் ஆண்டு நவம்பர் 15 -இல் பிறந்தார் முன்னாள் மக்க ளவை உறுப்பினர் எஸ்.ஜி.முரு கையன். 1950-களில் இளம் கம்யூனிஸ்ட்களான தியாகி சிவராமன், இரணியன், ஆம்பலா பட்டு ஆறுமுகம் போன்ற வீரத்தியாகிகள் துப்பாக்கிச்சூட்டிற்கு பலியானது எஸ்.ஜி.முருகையனுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1953-களில் ரோசன்பர்க் தம்பதியருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போ ராட்டம் நடைபெற்றது. அப்போது முத்துப் பேட்டையில் மாணவர்களைத் திரட்டி கையெழுத்து இயக்கத்தை நடத்தினார். குடும்ப வறுமையின் காரணமாக இவர்  தனது கல்வியை பாதியிலேயே நிறுத்தி விட்டு அஞ்சல் ஊழியராக சில மாதங்க ளும், பிறகு பள்ளி ஆசிரியராகவும் பணி யாற்றினார். எஸ்.ஜி.முருகையன் - நாகம் மாள் திருமணம் 1955-ஜூன்-2 இல் சீர்திருத்த  முறையில் சிறப்பாக நடைபெற்றது.

1960-இல் மீண்டும் நொச்சியூர் ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள்  பணியாற்றினார். 1961-ல் கோட்டூர்ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டபோது இதன் முதல் ஒன்றிய பெருந்தலைவராக எஸ்.ஜி. முருகையன் தேர்ந்தெடுக்கப்பட்டார்; இந்தி யாவிலேயே தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முதல் ஒன்றிய பெருந்தலைவர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்தது. ஒன்றிய பெருந்தலைவராக சிறப்பா கப் பணியாற்றிய எஸ்.ஜி.முருகையன் 1963 -இல் இந்திய - சோவியத் கலாச்சாரக் கழகத் தின் சார்பில் ரஷ்யாவுக்கு இரண்டு வாரம் அழைக்கப்பட்டு, வரலாற்றுச் சிறப்பு மிக்க  பல இடங்களையும், அங்குள்ள தொழிற்சா லைகள் - அறிவியல் கூடங்களையும் சுற்றிப்  பார்த்து அனுபவங்களைப் பெற்றார். இளைஞர் பெருமன்றத்தின் தஞ்சை  மாவட்டத் தலைவராக எஸ்.ஜி.முருகைய னும், செயலாளராக ஏ.எம்.கோபுவும் பொ றுப்புகளை ஏற்று சிறப்பான முறையில் செயல்பட்டு வந்தனர். பிறகு, இளைஞர் பெருமன்றத்தின் அகில இந்திய துணைத் தலைவராகவும் எஸ்.ஜி.முருகையன் தேர்வு செய்யப்பட்டார்.

1969 ஜூன் 16 முதல் 21 வரை கணப தியா பிள்ளை கமிஷன் தீர்ப்பை அமல்ப டுத்தக் கோரி, கீழத்தஞ்சை மாவட்டம் முழு வதும் நடந்த மறியலில் இரண்டு மாத காலமும், 1970-இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய நில மீட்சிப் போராட்டத்தில் நெடும்பலம் சாமியப்ப முதலியார் நிலத் தில் இவரின் தலைமையில் 1000-த்துக்கும் மேற்பட்டோர் வயலில் இறங்கி போராட் டம் நடத்தியதில் இரண்டு மாத  காலமும் சிறைத் தண்டனை பெற்றார். 1977-இல் மக்களவைத் தேர்தலில் நாகப்பட்டினத்தில் போட்டியிட்டு எஸ்.ஜி.முருகை யன் வெற்றி பெற்றார். 1977-இல்  டிசம்பரில் ஏற்பட்ட புயலில்  பாதிக்கப்பட்ட நாகை நாடாளு மன்றத் தொகுதி மக்களை  சைக்கிளிலேயே முத்துப்பேட்டையிலிருந்து நாகப்பட்டினம், வேதாரண்யம் கடற்கரை கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு அதி காரிகளை சந்தித்து உணவு,

நிவாரணத் தொகை வழங்குவதற்கு தொடர்ந்து போரா டினார். மக்களவையில் மக்களின் கோரிக் கைகளை தமிழிலேயே பேசினார் என்பது  குறிப்பிடத்தக்கது. தஞ்சாவூர் மாவட்டத்துக்காகப் போராடி யவர்கள் குறித்த வரலாற்றை ‘தஞ்சைத்  தரணியில் ரத்தம் சிந்திய கம்யூனிஸ்ட்டு கள்’ என்ற நூலை 1975-இல் எழுதி வெளி யிட்டார். 1979-ஆம் ஆண்டு ஜனவரி 5-இல்  தஞ்சாவூர் மாவட்ட கட்சி அலுவலத் துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது சித்தமல்லி என்ற தனது சொந்த கிராமத் திலேயே அவரை அரசியல் காழ்ப்பு ணர்ச்சி காரணமாக சமூக விரோதிகள் வழி மறித்து கத்தியால் குத்திப் படுகொலை செய்தனர். அவருடைய படுகொலை செய்தியறிந்து தஞ்சை மாவட்ட உழைப் பாளி மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்ட னர். அன்று முதல்வராக இருந்த எம்.ஜி. ஆர். இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று இரங்கல் உரையாற்றினார்: ‘காந்தியின் வழியில் இளமைப் பருவத்திலிருந்தே எஸ். ஜி.முருகையன் மக்களின் தேவைகளை  மக்களுக்காக மக்களே பணியாற்றக்கூடிய ‘‘சிரமதானப் பணி’’ என்னும் அரும் பணி களை மேற்கொண்டுள்ளார். சாலைகள் அமைத்தல், குளங்கள் வெட்டுதல் ஆகிய  பணிகளை மேற்கொண்டு, அன்றைய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் சிறந்த ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் என்ற  பாராட்டைப் பெற்றுள்ளார். காந்தியின் சீட ராகவும், சிறந்த மக்களவை உறுப்பினராக வும், தமிழக மக்களின் நல்ல சேவகராக வும், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக வும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. - ஆரூரான்