2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பு நீக்கம் நடவடிக்கை திட்டம் பேரிடியாய் செந்தாமரை மீது இறங்கியது.தனது தறிகளை இயக்கும் தொழிலாளர்களுக்கு கூலிகொடுக்க பணம் இல்லை. நூல் வாங்க பணம் இல்லை. நாளடைவில் தொழிலாளர்கள் வேலையை விட்டு நின்றுவிட்டார்கள். விசைத்தறியை இயக்கமுடியவில்லை. வருமானமும் இல்லை. குடும்பத்தை நடத்துவதே பெரும்பிரச்சனையாகிவிட்டது. வேறு வழியின்றி தன்னுடைய 12 விசைத்தறி இயந்திரங்களையும் உதிரி உதிரியாக பிரித்து பழைய இரும்புக்கடைக்கு விற்றுவிட்டார். செய்துகொண்டிருக்கும் தொழிலை கைவிடுவது