tamilnadu

img

ஓசூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

ஓசூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

கிருஷ்ணகிரி, பிப். 23- ஓசூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி ஆண்டு விழா பள்ளி வளா கத்தில் நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் கூத்தரசன் தலைமை தாங்கினார் முதல்வர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், அதியமான் கல்வி குழுமங்களின் அறக்கட்டளை ஸ்தாபகர் முனைவர் தம்பிதுரை, அறக்கட்டளை நிர்வாகி மருத்துவர் லாசியா தம்பிதுரை, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி கலந்து கொண்ட னர். கடந்த கல்வி ஆண்டில் 100 விழுக்காடு  வருகை பதிவேடு உள்ள மாணவர்களுக்கும், விளையாட்டு, கல்வி,மற்றும் பல துறைகளி லும் மாநில, மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும், சிறந்த ஆசிரியர்க ளுக்கும் சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கி னர். ஓசூர் வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளி முதல்வர் நான்சி, நிர்வாகி ஆண்ட்ரூ மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இறுதி யில் நடைபெற்ற பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தன.