Disturbed

img

‘குட்கா புகழ்’ என பிரேமலதா விளித்ததால் நொந்து போன அமைச்சர் விஜயபாஸ்கர்

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பதில்சொல்வதாக நினைத்துக் கொண்டுஅழுத்தம் திருத்தமாக ‘குட்கா புகழ்அமைச்சர்’ என தேமுதிக பொருளாளர்பிரேமலதா பேசியதால் நொந்து போனார் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.திருச்சி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து வியாழக்கிழமை இரவு புதுக் கோட்டை பேருந்து நிலையத்தில் திறந்தவேனில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசினார்