tamilnadu

img

கலங்கி நிற்கும் வாழைக்காய் விவசாயிகள்

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக் கானல் கீழ்மலை கிராமங்களான தாண்டிக்குடி, மங்களம்கொம்பு பெரும்பாறைகே.சி.பட்டி, மஞ்சள் பரப்பு, புல்லாவெளி,கானல் காடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் மலைவாழை பயிரிடப்படுகிறது. மலை வாழைக்காய்கள் தாண்டிக்குடி சந்தையில் சந்தைப் படுத்துவார்கள். வாழைப்பழம் சிறிய வாழை, பெரியவாழை என பிரிக்கப்பட்டு 400 லிருந்து500 காய்கள் வரை பொதியாக கணக்கிட்டு ஏலம் விடப்படுகிறது.  வாழைக்காய்கள் சென்னை மாதவரம் மார்கெட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஊரடங்குஉத்தரவிற்கு முன்பு சிறிய வாழைக்காய்,பெரிய வாழைக்காய் மூன்று ரூபாய்மற்றும் 13 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது ஒரு ரூபாய் மற்றும் எட்டுரூபாய் என விலை நிர்ணயிக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கிற்கு  முன்புதாண்டிக்குடியில் செவ்வாய், சனிக்கிழமை ஆகிய இரு தினங்களில் வாழைக்காய் சந்தை நடைபெறும். ஊரடங்கிற்கு பின்பு வாரத்தில் ஒரு நாள் மட்டும் சந்தை நடைபெறுகிறது.  சுமார் ஒருலட்சம் வாழைக் காய்களை விவசாயிகளே நேரடியாக விற்கின்றனர். சென்னை மாதவரம் மார்க்கெட்டிற்கு காலை நான்கு மணி வரை வாழைக்காய் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. தற்போது  வாகனங்கள் சற்று தாமதமாக சென்றாலும் உள்ளே அனுமதிப்பதில்லை. இதனால் தாமதமாகச் செல்லும்வாகனங்களில் உள்ள பழங்கள் பாதிவிலைக்கு விற்கப்படுகிறது. இதனால் வியாபாரிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுகிறது. ஊரடங்கு உத்தரவுமுடியும்வரை மாதவரம் மார்க்கெட்டில் காலை எட்டு மணி வரை வாழைக்காய் ஏற்றிவரும் வாகனங்களை அனுமதிக்கவேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. 

 வாழை விவசாயி கூறுகையில், ஒவ்வொரு முறையும் வாழைக்காய் ஒருபொதி ரூ.6000 மற்றும் அதற்கு மேலும் விலைபோகும். தற்போது  ரூ. 1,500 வரை விலை போகிறது. ஊரடங்கால் சந்தை ஒரு நாள் மட்டுமே கூடுகிறது. இதனால் வாழைக் காய்கள் பழமாகி அழுகி விடுகிறது. எங்களுக்கு பாதிக்கு மேல் நஷ்டம் ஏற்படுகிறது. 35 ஏக்கரில்வாழை பயிரிட்டு அதில்  36 பொதிகள்மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. மூன்று லட்சத்திற்கு விற்க வேண்டியகாய்கள் ஒரு லட்சத்து 20 ஆயிரம்ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகியுள்ளது. 

யானைகள் தொல்லை 
ஊரடங்கால் ஒரு புறம் நஷ்டமென் றால் யானைகளால் மற்றொரு புறம் நஷ்டமேற்படுகிறது. வாழைக்காயை யானைகள் அடியோடு நாசமாக்கி விட்டு சென்று விடுகின்றன. இதுகுறித்து அரசிடம் பலமுறை மனுக்கள் கொடுதுவிட்டோம். வேட்டு போட்டால் யானை எதிர்த்து வருகிறது. யானைகள் நடமாடுவதால் வேலையாட்கள் வேலைக்கு வருவதில்லை. அப்படியேவந்தாலும்  வேலை முடித்து காய்கள் கொண்டு வரும் வாகனங்களில் திரும்பிச்செல்கிறார்கள்.  காவல்துறையினரோ வாகனங்களில் ஏன் ஆட்களை ஏற்றி வருகிறீர்கள் எனக் கேட்கிறார்கள். இந்தநிலை நீடித்தால் என்ன செய்வது என் கின்றனர் விவசாயிகள்.