tamilnadu

‘குட்கா புகழ்’ என பிரேமலதா விளித்ததால் நொந்து போன அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை, ஏப்.5-திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பதில்சொல்வதாக நினைத்துக் கொண்டுஅழுத்தம் திருத்தமாக ‘குட்கா புகழ்அமைச்சர்’ என தேமுதிக பொருளாளர்பிரேமலதா பேசியதால் நொந்து போனார் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.திருச்சி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து வியாழக்கிழமை இரவு புதுக் கோட்டை பேருந்து நிலையத்தில் திறந்தவேனில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசினார். வேனுக்குள் முன் சீட்டில்அமைச்சர் விஜயபாஸ்கர் உட்கார்ந்து இருந்தார். அப்போது பேசிய பிரேமலதா, நமது அமைச்சர் விஜயபாஸ்கரை குட்கா புகழ் அமைச்சர் என்கிறார்கள் என்றார். அழுத்தம் திருத்தமாக இப்படி அவர் பேசியதும். அமைச்சர்முகம் வாடிப் போனது. இதனால், ஆத்திரமடைந்த அதிமுக தொண்டர்கள் பிரேமலதாவுக்கு எதிராக சத்தம் போட்டனர். இருங்க சொல்றேன் எனப் பதற்றத்துடன் சமாளித்தவர், நமதுஅமைச்சரை குட்கா புகழ் என்றால்திமுக தலைவரை குறை சொல்வதில்புகழ் பெற்றவர் எனப் பட்டம் கொடுப் போம் என்றார். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஒருவரை ஒருவர் குறை சொல்லித் தான் பேசுவார்கள். இதெல்லாம் பதிலடியா? அமைச்சரை வேண்டுமென்றே பிரேமலதா அவமானப்படுத்தி விட்டார் என அதிமுகவினர் கொந்தளித்தனர்.அதன் பிறகு, இது ராசியான கூட்டணி, இயற்கையான கூட்டணி, சுறுசுறுப்பான இளமையான அமைச்சர் என எதையே பேசிப் பார்த்தார். அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள் முகத்தில் ஈ ஆடவில்லை. இவர்களை எல்லாம் நாம தூக்கிச் சுமக்க வேண்டிது நமது தலையெழுத்தா என அதிமுகவினர் புலம்பியதைக் கேட்க முடிந்தது.