சென்னை:
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,176 கர்ப்பிணிகளில் 1,515 பேர் குணமடைந்ததால் மருத்துவமனையில் இருந்து வீடுதிரும்பியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சனிக்கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக் கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,176 கர்ப்பிணிகளில் 1,515 பேர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டுள்ளனர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகள் 500இல் இருந்து 750 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 90விழுக்காடு அளவுக்கு டிஸ்சார்ஜ் விகிதம் உள்ளது.நுரையீரலில் கொரோனா பாதிப்பு கண்டறிய 8,000 பேருக்கு சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களால் கூட கணித்து சொல்ல முடியாத வைரஸாக கொரோனா உள்ளது. விடுபட்ட 444 மரணங்கள் குறித்து அரசு தெளிவான விளக்கம் அளித்துவிட்டது.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.