உலக அளவில் கொரோனா பாதிப்பு 2.07 கோடி என்றும், ஆனால் அதே நேரத்தில் கொரோனாவிலிருந்து 1.36 கோடி பேர் குணமடைந்துள்ளனர் என்றும் உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை குணமடைந்தோர் எண்ணிக்கை நெருங்கி வருவது மக்களை திருப்தி அடைய செய்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் கொரோனா உயிரிழப்பு
7.51 லட்சம் ஆக உயர்ந்துள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய ஒரு தகவல் ஆகும்
கொரோனாவின் தாயகம் என்று கூறப்படும் சீனாவில் புதிதாக 25 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அந்நாட்டின் பாதிப்பு எண்ணிக்கை 84,737 அக அதிகரிப்பு என்றும் தகவல் வெளிவந்துள்ளது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,066 கொரோனா கேஸ்கள் பதிவானதாகவும், இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் அதிக அளவில் கேஸ்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. மேலும் இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 23,95,471 ஆக உயர்வு என்பதும், இந்தியாவில் மொத்தமாக 16,95,850 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,360,302 என்பதும், பலியானோர் எண்ணிக்கை 169,131 என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிரேசில் நாட்டில்
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,170,474 என்பதும், பலியானோர் எண்ணிக்கை 104,263 என்பதும் குறிப்பிடத்தக்கது