ரூ.8 கோடி சொத்துக்காக கணவரை கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கானாவின் உப்பல் பகுதியைச் சேர்ந்த பெண், தனது கணவரின் ரூ.8 கோடி சொத்துக்காக அவரைக் கொன்று, சுமார் 800 கிலோ மீட்டர் பயணித்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உடலை வீசிய கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த சம்பவத்தில், மனைவி நிஹாரிகா, அவரது ஆண் நண்பர் நிகில் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெலுங்கானாவில், தனது பெயரில் இருக்கும் சொத்துகளை மனைவி பெயரில் மாற்றித் தர ஒப்புக்கொள்ளாததால் தொழிலதிபரான ரமேஷ் (55) அக். 1ஆம் தேதி அவரது மனைவியால் கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து, கொலை செய்ததை மறைக்க உடலை காரில் எடுத்துக்கொண்டு 800 கிலோ மீட்டர் பயணித்து, கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் ரமேஷின் உடலைப் போட்டு எரித்துள்ளனர்.
மூன்று வாரங்களுக்கு முன்பு, எரிந்த நிலையில் இருந்த உடலைக் கைப்பற்றிய கர்நாடகா காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் துரித விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து தெலுங்கானா காவல்துறையினருடன் இணைந்த நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டது தெலுங்கானவைச் சேர்ந்த தொழிலதிபர் ரமேஷ் என்பதும், கொலை செய்தது அவரின் மனைவி நிஹாரிக என்பதும் தெரியவந்தது. மேலும், நிஹாரிக தனது நண்பருடன் இணைந்து இக்கொலையில் ஈடுபட்டதும் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.