election2021

img

அமைச்சர் விஜயபாஸ்கர் மீது திமுக புகார்....

புதுக்கோட்டை:
தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படுவதாக விராலிமலை தொகுதி வேட்பாளர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது தேர்தல் நடத்தும் அலுவலரிடம் திமுகவினர் செவ்வாய்க்கிழமை புகார் மனு அளித்தனர். 

விராலிமலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் எம்.எஸ்.தண்டாயுதபாணியிடம் திமுக வடக்கு மாவட்டபொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையிலானோர் புகார் மனு அளித்தனர்.அதில், விராலிமலை தொகுதிக்குட்பட்ட இலுப்பூர் அருகே மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனையில் காரில்கொண்டு வரப்பட்ட அதிமுக சின்னம் பொறித்த சேலைகள்பறிமுதலாகி உள்ளன. மேலும், முக்கியமான ஒரு டைரியும் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த டைரியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயருடன் கூடிய பல்வேறு விவரங்கள் எழுதப்பட்டுள்ளன. தேர்தல் விதிகளை மீறி தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே, கடந்தமாதம் அவர் மீது அளிக்கப்பட்ட புகார் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தொடர்ந்து தேர்தல்விதிகளை மீறி செயல்பட்டு வரும் விஜயபாஸ்கரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.