குமரிநாட்டுத் தமிழ்ப் பொதுமக்கள் இலைகளை நால்வகையாக வகுத்து, வேம்பும் வாழையும் போல மெல்லிதாயிருப்பதை இலை என்றும்நெல்லும் புல்லும் போலத் தாளை (தண்டை) ஒட்டி நீண்டு சுரசுரப்பாக இருப்பதைத் தாள்என்றும் சோளமும் கரும்பும் போலப் பெருந் தாளாக நீண்டு தொங்குவதைத் தோகை என்றும், தென்னையும் பனையும் போலத் திண்ணமாய் இருப்பதை ஓலை என்றும் வழங்கினர்.....