tamilnadu

img

ஜூலை 9 பொது வேலை நிறுத்தம் விழுப்புரத்தில் தொழிற்சங்கங்கள் ஆலோசனை

ஜூலை 9 பொது வேலை நிறுத்தம்  விழுப்புரத்தில் தொழிற்சங்கங்கள் ஆலோசனை

விழுப்புரம், ஜூன் 22 - மத்திய தொழிற்சங்க ங்கள் இணைந்து ஜூலை 9 ஆம் தேதி, ஒன்றிய அரசை கண்டித்து நடத்தும் பொது வேலை நிறுத்தம் குறித்து ஆலோசனை கூட்டம் விழுப்புரம் சிஐடியு அலுவலகத்தில் தொமுச தலைவர் சேகர் தலைமையில் நடை பெற்றது.  இந்த கூட்டத்தில் சிஐடியு மாநில துணைத் தலைவர் கருப்பையா கலந்து கொண்டு வேலை நிறுத்தம் குறித்து பேசினார். கூட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.முத்துக்குமரன், மாவட்டச் செயலாளர் ஆர்.மூர்த்தி, சுமைப்பணி சங்க பி.குமார் உட்பட விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்ட மத்திய தொழிற்சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.