பொதுத் தேர்தலையொட்டி இதுவரை பிரதமர் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தொண்டைகிழிய அவர் பேசிய பேச்சுக்களிலிருந்து, இப்போதே அவருக்கு விரக்தி மனநிலை ஏற்பட்டுவிட்டதைக் காணமுடிகிறது.
பொதுத் தேர்தலையொட்டி இதுவரை பிரதமர் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தொண்டைகிழிய அவர் பேசிய பேச்சுக்களிலிருந்து, இப்போதே அவருக்கு விரக்தி மனநிலை ஏற்பட்டுவிட்டதைக் காணமுடிகிறது.
ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் பலரின் பேச்சுக்களையெல்லாம் கேட்டிருக்கிறேன். அவை எப்போதும் தங்கள் பிரதமர் பதவியின் கண்ணியத்தையும், கவுரவத்தையும் நிலைநிறுத்தும் வண்ணமே அமைந்திருக்கும். ஆனால் இந்தக் கோமான் அதைப்பற்றியெல்லாம் கிஞ்சிற்றும் பொருட்படுத்துவதில்லை.