நான்காம் வகுப்பு பாடப் புத்தகத்தில் காண்டாமிருகத்தின் புகைப்பட சர்ச்சையை தொடர்ந்து, என்.சி.இ.ஆர்.டி-க்கு கண்டனம் எழுந்து வருகிறது.
சிபிஎஸ்இ 4-ஆம் வகுப்பு கணித பாடப் புத்தகத்தில், இந்திய காண்டாமிருகம் என குறிப்பிட்டு, தவறுதலாக இரண்டு கொம்புகள் உள்ள ஆப்பிரிக்க காண்டாமிருகத்தின் புகைப்படம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவுக்கு (NCERT) வனவிலங்கு நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.