தஞ்சை பெரிய கோயில் தேரில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி
3 பேருக்கு வலைவீச்சு
கும்பகோணம், ஏப்.30 - தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சாக்கோட்டை யைச் சேர்ந்த, தற்போது சென்னையில் வசித்து வரும் செந்தில் மற்றும் சாக்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன் ஆனந்தன் ஆகியோர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், ரியல் எஸ்டேட் செய்யும் செந்திலுக்கும் சாக்கோட்டையைச் சேர்ந்த கேசவனுக்கும் ரியல் எஸ்டேட் செய்வதில் கொடுக்கல்-வாங்கல் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ரியல் எஸ்டேட் செய்த செந்தில், மணிகண்டன், ஆனந்தன் ஆகியோர் சாக் கோட்டையில் இருந்த போது பல்வேறு கொலை-கொள்ளை குற்ற வழக்கில் இருந்த சாக்கோட்டை கார்த்தி என்ற கார்த்திகே யன், பிரகதீஷ் அன்சாரி, புரோஸ்தீன், கேசவன் மணி கண்டன், வீராச்சாமி, சோமுராஜா, சாரதி, கண்ணதாசன், மோகன், தமிழ் வேந்தன் சங்கர் உள்ளிட்ட 11 பேர் கொண்ட கும்பல், திங்களன்று மாலை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த செந்தில், மணிகண்டன், ஆனந்தன், ஆகியோரை செந்தி லுக்குச் சொந்தமான காரிலேயே வைத்து கடத்தியுள்ளனர். அப்போது வாட்சப் மூலம் செந்தில் மனைவிக்கு தகவல்கள் கொடுத்துள்ளார். இது சம்பந்தமாக புவனேஸ்வரி காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் கிடைத்தவுடன் திருவிடைமருதூர் உட்கோட்ட காவல்துறையினர் துணைக் காவல் கண்காணிப்பாளர் ராஜு தலைமையில், ஆய்வாளர் ராஜா, துணை ஆய்வாளர் மார்ட்டின் பவுல்ராஜ், இளைய ராஜா, பாபு, அருண், கார்த்திக், ராஜசேகர் உள்ளிட்ட தனிப் படையினர் விரைந்து சென்று, கடத்திய 9 பேரையும் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயில் சொகுசு விடுதியில் தங்கியிருந்த போது கைது செய்தனர். மேலும், மூன்று பேரையும் மீட்டு கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளியான கார்த்திக் உட்பட 3 பேர் தப்பிச் சென்றுவிட்டனர். இது சம்பந்தமாக நாச்சியார் கோவில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து, கைது செய்த குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து நாச்சியார்கோவில் காவல் துறை யினர் விசாரித்து வருகின்றனர்.
பெயர் மாற்ற செய்ய லஞ்சம்: இருவருக்கு 2 ஆண்டுகள் சிறை
ஜெயங்கொண்டம், ஏப்.30 - அரியலூர் மாவட்டம், சிங்காரம் தெருவைச் சேர்ந்த மணி கண்டன் என்பவர், வீட்டு வரியில் தனது தாயார் பெயரை மாற்றம் செய்வதற்காக கடந்த 2013 டிசம்பர் 11 அன்று, அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் வருவாய் உதவியாள ராக பணியாற்றும் வீரமணி, ‘வீட்டு வரி வழங்க வேண்டும் என்றால், தனக்கும், தன்னுடன் வேலைபார்க்கும் வருவாய் உதவியாளர் கண்ணன் என்பவருக்கும் சேர்த்து லஞ்சமாக பணம் ரூ.2 ஆயிரம் கொடுக்க வேண்டும்’ என்று கேட்டு உள்ளார். இதுகுறித்து மணிகண்டன் அரியலூர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். ஊழல் தடுப்புச் சட்டம் 1988இன் படி வழக்குப் பதிந்தும், அந்த லஞ்சப் பணத்தை அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் மணி கண்டன், வீரமணி என்பவரிடம் கொடுத்தார். அதை இருவ ரும் பெற்று தலா ரூ.1000 வீதம் பிரித்துக் கொண்டனர். உடனே, மறைந்திருந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். அந்த வழக்கு குறித்து மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் /சிறப்பு நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கினை விசாரித்த தலைமை குற்றவியல் நடுவர் /சிறப்பு நீதிபதி மணிமேகலை புதனன்று வீரமணி மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்ப ளித்து, அவர்கள் இருவருக்கும் தலா ஓர் ஆண்டு கடுங்கா வல் தண்டனையும், ரூ.1000/- அபராதமும், தலா 2 ஆண்டு கள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1000/- அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் கடுங்காவல் தண்ட னையும் விதித்தார். இத்தண்டனையை ஏக காலத்தில் அனு பவிக்கவும் தீர்ப்பு வழங்கினார்.
தஞ்சை பெரிய கோயில் தேரில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி
தஞ்சாவூர், ஏப்.30 - தஞ்சாவூர் பெரியகோயில் சித்திரைத் தேரோட்டத்தை யொட்டி, தேரில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடை பெற்றது. இக்கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத் துடன் ஏப்.23 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 18 நாட்கள் நடக்கும் இவ்விழாவின் 15 ஆம் திருநாளான மே 7 அன்று தே ரோட்டம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, மேல வீதியி லுள்ள தேரில் கட்டுமானம் மேற்கொள்வதற்காகப் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில், தஞ்சா வூர் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கோ.கவிதா, கோயில் செயல் அலுவலர் பெ.சத்தியராஜ், கண் காணிப்பாளர் ரவி, ஆய்வாளர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, தேரை அலங்கரிக்கும் பணி நடை பெறுகிறது. சாதாரணமாக 19 அடி உயரமுள்ள இத்தேரை அலங்கரித்த பிறகு 50 அடியை எட்டும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.