tamilnadu

img

கோரையாற்றில் நீர்த்தேக்கம் அமைக்க நடவடிக்கை தேவை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

கோரையாற்றில் நீர்த்தேக்கம் அமைக்க நடவடிக்கை தேவை

குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

பெரம்பலூர், ஏப்.30 -  பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சி யர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் புதன் கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் என்.செல்லதுரை பேசுகையில், “பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டப்பகுதியில் உள்ள  கோரையாற்றில் விவசாயிகள் பயன்பெறும்  வகையில் நீர்த்தேக்கம் அமைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். தோட்டக்கலை மின் இணைப்பை சாதாரண மின் இணைப் பாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” கேட்டுக் கொண்டார்.   தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன் பேசு கையில், “விவசாயிகளுக்கு குட்டை ரக தென்னங்கன்றுகள் மானியத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் நகைக்கடனுக்கு வட்டி மட்டும் கட்டி புதுப் பித்துக் கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். அனைவரின் கோரிக்கைகளையும் கேட்ட றிந்த மாவட்ட ஆட்சியர், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களை உடனுக்குடன் பதில்  அளிக்க உத்தரவிட்டார். அதனடிப்படையில், அலுவலர்கள் விவசாயிகளுக்கு பதிலளித்த னர்.