tamilnadu

சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலையீட்டால் ஆக்கிரமிப்பை அகற்ற கோட்டாட்சியர் உத்தரவு

சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலையீட்டால்  ஆக்கிரமிப்பை அகற்ற கோட்டாட்சியர் உத்தரவு

பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த பாதை வேலியிட்டு அடைப்பு 

தஞ்சாவூர், ஏப்.30 -  தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக் கோட்டை சரகம், கொல்லாங்கரை கிரா மத்தில், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பட்டியலின மக்கள் பயன் படுத்தி வந்த நடைபாதையை வேலி  அமைத்து, அடைத்த தனிநபர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். நடை பாதையை மீட்டுத் தர வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மே 2 அன்று, தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப் படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஏப்.29 அன்று மாலை, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட் சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் செ.இலக்கியா தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.  இதில், சிபிஎம் - தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.செந்தில்குமார், என்.சரவணன், கே.அபிமன்னன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் என்.குருசாமி, தஞ்சா வூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந்தராசு, ஒன்றியக்குழு உறுப்பி னர் எஸ்.கோவிந்தராசு, தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செய லாளர் ஆர்.கலைச்செல்வி, மாவட்டத் தலைவர் கே.பன்னீர்செல்வம், மாவட்டக் குழு உறுப்பினர் வீ.கரிகாலன், கிராம  மக்கள் ஆகியோரும், அரசுத் தரப்பில் காவல்துறையினர், வருவாய்த் துறை யினர் மற்றும் எதிர்தரப்பினர் கலந்து கொண்டனர். இதில், தனிநபரால் வேலியிட்டு அடைக்கப்பட்ட பாதையை, பொது மக்களின் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்க வேண்டும் என வருவாய் கோட்டாட்சியர் செ.இலக்கியா உத்தர விட்டார். இதையேற்று, நடைபெற விருந்த போராட்டம் ஒத்தி வைக்கப் பட்டது.