tamilnadu

img

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தனிநபருக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள்

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தனிநபருக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூர், ஏப்.30 - தா.பழூர் கடைவீதியில் ஆக்கிர மிப்புகளை அகற்றுவதில், தனிநப ருக்கு ஆதரவாக, லஞ்சம் பெற்றுக் கொண்டு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் செயல்பட்டதாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரியலூர் மாவட்டம்  தா.பழூர் கடை வீதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு  நெடுஞ்சாலைத் துறையினர் சார்பில் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமப்புகளை அகற்றும் பணி நடை பெற்றது.   இதில் தா.பழூர் கடைவீதியில், தனி நபருக்கு (பாண்டியன் ஸ்வீட் கடை உரி மையாளர்) ஆதரவாக லஞ்சம் பெற்றுக்  கொண்டு, ஒரு தலைபட்சமாக ஆக்கிர மிப்புகளை அகற்றிய நெடுஞ்சாலைத் துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி  துறை, காவல்துறை ஆகியோரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டம் ஒன்றியத் செய லாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை யில் நடைபெற்றது. மாவட்ட செயலா ளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் வி.பரமசிவம், டி. அம்பிகா, மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.செந்தில்வேல், இந்திய தேசிய காங்கிரஸ் கல்யாணி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  அதிகாரிகள் மற்றும் காவல்துறை யினர் தனி நபருக்கு ஆதரவாக லஞ்சம் பெற்றுக் கொண்டு செயல்பட்ட அனை வர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட தனிநபர் ஆக்கிர மிப்பு செய்துள்ள இடத்தை உடனடி யாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.