tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

மதுரை, ஏப்.30-  மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்  றம் செவ்வாயான்று நடைபெற்றது.  கொடியேற்ற நிகழ்ச்சியில் ஆயி ரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகப்புகழ் பெற்றது. இந்தாண்டு சித்திரைத் திருவிழாவுக்கான கொடியேற்று நிகழ்ச்சிக்கான ஏற்  பாடுகள் திங்கள் இரவு நடைபெற் றது. இதைத்தொடர்ந்து சித்திரைத் திருவிழா கொடியேற்றம் செவ்வா யன்று நடைபெற்றது. மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் கம்பத்தடி மண்டபம் கொடி மரம் முன்பு அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் எழுந்தருளினார். திருவிழா கொடி யேற்ற நிகழ்ச்சியில், மீனாட்சி சுந்த ரேசுவரர் அறங்காவலர் குழுத்தலை வர் ருக்குமணி பழனிவேல்ராஜன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பி னர்கள், மாவட்ட ஆட்சியர் சங்கீதா,  மாநகரக் காவல் ஆணையர் லோக நாதன், மேயர் வ.இந்திராணி, மாநகராட்சி ஆணையர் சித்ரா  விஜயன் மற்றும் திருக்கோயில் அதி காரிகள், ஊழியர்கள் பங்கேற்ற னர்.  கொடியேற்றத்தை முன்னிட்டு  ஆயிரக்கணக்கான பக்தர்கள் கம்பத்தடி மண்டப பகுதியில் குவிந்தனர். கொடியேற்றத்தை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர். சித்திரைத் திருவிழா வின் முக்கிய நிகழ்வான மீனாட்சி யம்மன் பட்டாபிஷேகம் மே 6ஆம்  தேதியும், திக்குவிஜயம் 7ஆம் தேதி யும் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்  கல்யாணம் மே 8 ஆம் தேதியும்,  அன்றைய தினம் இரவு திருக்கல் யாண கோலத்தில் பூப்பல்லக்கும், மே 9ஆம் தேதி நான்கு மாசி வீதி களில் திருத்தேரோட்டமும் நடை பெறுகிறது. இந்நிலையில் சித்தி ரைத்திருவிழாவின் தொடர்ச்சி யான அருள்மிகு கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு  மே 12ஆம் தேதியும் நடைபெறு கிறது.  செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியின்போது ஆண்டுதோறும் செய்தியாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர் களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில், செவ்வாயன்று நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சி யில் செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் கொடியேற்றம் நடைபெற்ற கம்பத்தடி மண்டபத்தில் வழக்க மாக செய்தியாளர்களுக்கு ஒதுக் கப்படும் இடம் இந்த ஆண்டு முக்கிய பிரமுகர்களுக்கு ஒதுக்கப் பட்டிருந்தது. உயர்நீதிமன்ற  உத்தரவு மீறல்  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, கோயிலுக்குள் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு, தொடரப்பட்ட பொதுநல வழக்கில்,  சித்திரைத் திருவிழா நடைபெறும் நாள்களில் அனைத்து  செய்தியாளர்கள், புகைப்பட கலை ஞர்கள் மற்றும் ஊடகவியலா ளர்களை கைப்பேசி மற்றும் புகைப்பட கருவிகளுடன் அனு மதிக்க வேண்டும் என்று உயர்நீதி மன்ற மதுரைக்கிளை உத்தர விட்டது. தற்போது உயர்நீதிமன்ற உத்தரவை மீறி கோயில் நிர்வாகம் கொடியேற்ற நிகழ்ச்சியின்போது செய்தியாளர்கள் உள்ளிட்டோரை அனுமதிக்க மறுத்துள்ளது சர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது.

அனுமதியின்றி செயல்பட்ட பட்டாசு குடோனில் தீ விபத்து

சாத்தூர், ஏப்.30- விருதுநகர் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை அருகே  உள்ளது முத்தாண்டியாபுரம். இங்கு, ரகுநாதன்(50) என்பவ ருக்கு சொந்தமான குடோன் இரு ஆண்டுகளாக செயல்படா மல் இருந்தது. இந்நிலையில் அதில், அதிகாலை நேரத்தில்  பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு படையினர்  நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  ரகுநாத னுக்கு சொந்தமாக கரிசல்பட்டியில் செயல் பட்டு வந்த பட்டாசு  ஆலையில் விதிமீறல் காரணமாக சமீபத்தில் உரிமம் ரத்து  செய்யப்பட்டது. எனவே, செயல் படாத  குடோனில் உரிய  அனுமதியின்றி, சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி  நடைபெற்று பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. அப்போது ஏற்பட்ட மின் கசிவு காரணமாக வெடிவிபத்து   ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக  ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப் பதிவு செய்து   விசாரணை நடத்தி வருகின்றனர்.