ஆபிதீன் பள்ளியில் ஆண்டு விழா
பாபநாசம், ஏப்.30 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலைத் துறை ஆபிதீன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 27 ஆவது ஆண்டு விழா நடந்தது. பள்ளித் தாளாளர் ஹாஜா முஹைதீன் தலைமை வகித்தார். பள்ளி மேலாளர் தாஹிரா ஆண்டறிக்கை வாசித் தார். முன்னதாக பள்ளி நிர்வாக இயக்குனர் சாப்ஜான் வரவேற்றார். நாகை தொகுதி எம்.எல்.ஏ ஆளூர் ஷா நவாஸ் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசு வழங்கிப் பேசினார். பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி, மகாராஜா சில்க்ஸ் நிறுவனர் முகமது ரபி, பள்ளி நிர்வாக ஆலோசகர் ஸ்ரீ கிருத்திகா, முதல்வர் லூர்து ஜான்சன், துணை முதல்வர் இந்திரா உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளி மாணவர்களின் கலை, யோகா நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஆசிரியர்கள், லயன்ஸ், ரோட்டரி நிர்வாகி கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். தமிழ் ஆசிரியர் கற்பகச்செல்வி நன்றி கூறினார்.