பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு ஆலோசனைக்குழு தலைவராக RAW அமைப்பின் முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி நியமனமிக்கப்பட்டுள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக் குழுவின் 2-ஆவது கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு ஆலோசனைக்குழு தலைவராக RAW அமைப்பின் முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி நியமனமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் விமானப்படைத் தளபதி பி.எம்.சின்ஹா, முன்னாள் ராணுவ தளபதி ஏ.கே.சிங், ரியர் அட்மிரல் மோன்டி கன்னா, இந்திய காவல்துறையில் இருந்து ஓய்வுபெற்ற ராஜீவ் ரஞ்சன் வர்மா மற்றும் மன்மோகன் சிங், முன்னாள் இந்திய வெளியுறவு சேவை (IFS) தூதர் பி. வெங்கடேஷ் வர்மா ஆகியோர் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.