2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டு ரஷ்யா இந்தியாவு டன் 1.9 மடங்கு அதிகமாக ( 5,970 கோடி டாலர்க ளுக்கு) வணிகம் செய்துள்ளது. ரஷ்ய நாட்டின் சர்வதேச ஊடகம் வெளியிட்டுள்ள அதிகா ரப்பூர்வ தகவல் இதை உறுதி செய்துள்ளது.மேலும் அந்நிறுவனம் இந்திய அரசின் வணிக மற்றும் தொழில் துறையின் தரவு களை மேற்கோள் காட்டியுள்ளது.இந்தியா வை விட ரஷ்யாவே அதிகமாக ஏற்றுமதி செய்து வருவதும் இதன் மூலம் தெரிய வந்துள்ளது.