- ரஷ்யா தனது வெளிநாட்டு கடனை ரூபிளில் தர தொடங்கியுள்ளது. இதனை ஏற்பதா வேண்டாமா என்பது மேற்குலக நாடுகளின் முடிவில்!
- உக்ரைன் அனைத்து மேற்கத்திய நாடுகளின் ஜனநாயக விழுமியங்களுக்காக போராடுவதால் ஐரோப்பிய ஒன்றியத்தில் அந்த தேசத்தை “அடை யாளப் பூர்வமாகவாவது”
- இணைக்க வேண்டும் என பெல்ஜியம் பிரதமர் அலெக்சான்டர் க்ரூ கூறி யுள்ளார். இப்படித்தான் எங்களையும் 1999ல் இணைத்தார்கள். இதுவரை முழு உறுப்பினர் தகுதி தரவில்லை என துருக்கி சுட்டிக்காட்டுகிறது.
- அமெரிக்காவில் வரலாறு காணாத விலை உயர்வுக்கு ரஷ்யாதான் காரணம் என ஜோ பைடன் கூறிவருகிறார். ஆனால் அமெரிக்க மத்திய வங்கி யின் தலைவர் ஜெரோம் பொவெல் உக்ரைன் போர் அமெரிக்காவின் விலை உயர்வுக்கு அடிப்படை காரணம் அல்ல என கூறியுள்ளார். பைடன் கருத்தை எவரும் அங்கீகரிப்பது இல்லை போலும்!
- “கேசர்” எனப்படும் அதி நவீன பீரங்கிகளை பிரான்சு உக்ரைனுக்கு தந்தது. ஆனால் போரில் இது ரஷ்ய ராணுவத்திடம் சிக்கியது. இதனை பிரித்து ஆராய ரஷ்ய ஆயுத தயாரிப்பு ஆலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு பிரான்சு ஜனாதிபதி மேக்ரோனுக்கு நன்றி தெரிவித்த ரஷ்யாவின் ஆயுத தயாரிப்பாளர் உரல்வகோன்சவோட் மேலும் இது போன்ற நவீன ஆயுதங்களை அனுப்பி வைக்கு மாறு மெக்ரோனை நக்கல் செய்துள்ளார்.
- இந்த குளிர்காலத்தில் எரிபொருளுக்கு “ரேசன் முறையை” அமல்படுத்த அயர்லாந்து முடிவு செய்துள்ளது.
- ரஷ்ய தடைகள் காரணமாக இன்னும் எத்தனை தேசங்களுக்கு இந்த நிலை உருவாகிறது என்பது விரைவில் தெரிந்துவிடும்.
- தன்னிடம் கையிருப்பில் உள்ள பெரும்பாலான ஆயுதங்களை உக்ரைனுக்கு தந்துவிட்டதாகவும். இந்த ஆயுதங்களை மீண்டும் உற்பத்தி செய்து பெற பல வருடங்கள் ஆகலாம் எனவும்
- பிரிட்ட னின் ராணுவ அட்மிரல் டோனி ரடாக்கின் அச்சம் தெரிவித்துள்ளார். எனினும் உக்ரைன் தொடர்ந்து போரிட வேண்டும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகிறார்.
- அமெரிக்க காலணி தயாரிப்பு நிறுவனம் “நைக்” ரஷ்யாவை விட்டு வெளியேறியுள்ளது.