world

img

60 வயதை கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து... ரஷ்யா அனுமதி...

மாஸ்கோ:
ரஷ்யாவில் 60 வயதைக் கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து அளிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு 30 லட்சத்தை கடந்தது. 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர். இந்நிலையில் ரஷ்யாவின் கமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி  புதின் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார்.ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பு மருந்து 92 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாக அந்நாட்டு அரசு கடந்த மாதம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்குக் இந்த தடுப்பு மருந்தைச் செலுத்தும் நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. மேலும் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரசுக்கு ஸ்புட்னிக் தடுப்புமருந்து சிறந்த பலனை அளிப்பதாக ரஷ்யா தெரிவித்தது. இந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு 60 வயதை கடந்தவர்களுக்கும் ஸ்புட்னிக் கொரோனா தடுப்புமருந்து அளிக்கலாம் என்றுரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள் ளது.

;