பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடாவை தொடர்ந்து பிரான்சும் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்துள்ளது.
ஐ.நா. கூட்டத்தில் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக அறிவித்தார். மேலும், அவர் வெளியிட்ட அறிக்கையில், “பாலஸ்தீன மக்களின் சுயாட்சி மற்றும் சுதந்திரத்தை மதிக்கும் வகையில் அவர்களை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பது உலக அமைதி நிலைநிறுத்தத்திற்கு அவசியம்” என வலியுறுத்தினார்.
பிரான்ஸின் இந்த முடிவை பல்வேறு நாடுகள் வரவேற்றுள்ளன. இதன் தொடர்ச்சியாக, இன்னும் பல நாடுகள் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.