இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சியின் 29 ஆவது மாநாடு அமைதி, தனி பாலஸ்தீனம், சமூக நீதிக்கான அறைகூவல்
ஷஃபாராம், மார்ச் 13- இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சியின் 29 ஆவது மாநாடு 2026 பிப்ரவரி 12 முதல் 14 வரை ஷஃபாராம் நகரில் வரலாற்றுச் சிறப்பு டன் நடைபெற்றது. நாடு முழுவதிலும் உள்ள கிளைகளிலிருந்து நூற்றுக்கணக்கான அரபு மற்றும் யூதப் பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மாநாடு, போர், இனவாதம் மற்றும் பாசிச ஆட்சிக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது. அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் உறுதியான போராட்டம் தொடக்க உரையில் கட்சியின் பொதுச் செயலாளர் அடெல் அமர், இன்றைய அரசியல் சூழல் குறித்த கவலையை வெளிப்படுத்தினார். கம்யூனிஸ்ட் செயல்பாட்டாளர்களை கைது செய்வது, அவர்களின் அரசியல் நடவடிக்கைக ளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது, காவல்துறை யால் கிளை அலுவலகங்களில் சோதனைகள் நடத்துவது, ஹடாஷ் கூட்டணியின் முக்கியக் கூட்டங்களை தடுப்பது என பல்வேறு வழிகளில் இஸ்ரேல் அரசு இடதுசாரிகளை முடக்க முயல்கி றது என்று அவர் கண்டித்தார். “இந்த அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் ஆதிக்கத்திற்கு எதிராக உறுதியாக நிற்பதில் எங்கள் கட்சி பெருமைப்படுகிறது. ஒரு வலு வான அமைப்பு என்பது போர், இனவாதம் மற்றும் பாசிசத்திற்கு எதிரான, சமூக நீதிக்கான உறுதிமிக்க போராட்டத்திற்காக மக்களைத் திரட்டும் அதிகத் திறனாகும்” என்று அவர் வலி யுறுத்தினார். இளைஞர்களுக்கு முன்னுரிமை மாநாட்டின் குறிப்பிடத்தக்க அம்சமாக, 49 உறுப்பினர்களைக் கொண்ட மத்தியக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் 13 புதிய உறுப்பி னர்கள் இணைந்துள்ளனர். டோவ் கானின் போன்ற மூத்த தலைவர்கள், இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் பொறுப்புகளிலி ருந்து விலகிக்கொண்டனர். 20 மற்றும் 30 வயதுகளில் உள்ள இளைஞர்கள் புதிய மத்தியக் குழுவில் அதிகளவில் இடம்பெற்றிருப்பது கட்சியின் எதிர்காலத்தைப் பற்றிய தெளிவான பார்வையை வெளிப்படுத்துகிறது. இஸ்ரேலில் செயல்படும் இளைஞர் கம்யூனி ஸ்ட் லீக் மற்றும் கட்சியின் மாணவர் அமைப்பு கள் சிறப்பாகச் செயல்பட்டதாக பாராட்டு தெரி வித்த மாநாடு, தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் முற்போக்கு ஆர்வலர்களை “வரலாற்றுச் சிறப்புமிக்க புரட்சிகரச் செயல்பாட்டில்” பங்களிக் குமாறும், சோசலிசத்தை முன்னெடுக்கும் இந்தப் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்தது. பாலஸ்தீன சுதந்திரமே மையக் கோரிக்கை 29 ஆவது மாநாட்டின் மிக முக்கியமான தீர்மானமாக பாலஸ்தீன மக்களின் தன்னாட்சி உரிமை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. 1967 ஜூன் 4 இல் நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளின் அடிப்படையில், கிழக்கு ஜெருசலேமை தலை நகராகக் கொண்ட சுதந்திரமான பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கான தீவிர ஆதரவை கட்சி அறிவித்தது. மாநாட்டு கோரிக்கைகள் காசாவில் நடந்துவரும் போரை உடனடி யாக நிறுத்துவது. இஸ்ரேல் ராணுவத்தை காசா விலிருந்து முழுமையாக வெளியேற்றுவது. பாலஸ்தீனர்களுக்கு மனிதாபிமான உதவி கிடைப்பதற்காக அனைத்து எல்லைகளையும் திறப்பது. இஸ்ரேல் அரசின் ஆக்கிரமிப்பு குடி யேற்றங்களை அகற்றுவது. ஐ.நா தீர்மானங்க ளின்படி பாலஸ்தீன அகதிகளின் தாயகம் திரும் பும் உரிமையை ஆதரிப்பது ஆகியவை மாநாட்டின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன. இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன அகதிகள் முகாம்களையும், ஐ.நா நிவாரண முகமையை யும் (UNRWA) குறிவைத்துத் தாக்கும் கொள் கைகளைக் கடுமையாகக் கண்டித்த மாநாடு, இவை பாலஸ்தீனத்தின் எதிர்காலத்தையும் சமாதான பேச்சுவார்த்தைகளையும் சிதைக்கும் முயற்சி என எச்சரித்தது. இஸ்ரேலுக்குள் வாழும் பாலஸ்தீன அரபுக் குடிமக்களுக்கு எதிரான பாகுபாடுகளையும், 2018-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட “தேசம்- அரசு சட்டத்தையும்” (Nation-State Law) மாநாடு கடுமையாகக் கண்டித்தது. சமூக நீதி மற்றும் சர்வதேச ஒருமைப்பாடு உள்நாட்டு பொருளாதார நீதிக்கான குரலாக, குறைந்தபட்ச ஊதியத்தை தேசிய சராசரி ஊதியத்தின் 60 சதவீதமாக உயர்த்த வேண்டும் என மாநாடு கோரியது. நெதன்யாகு தலைமை யிலான அரசாங்கம் ஜனநாயக சுதந்திரத்தை சிதைக்கிறது என்று கடுமையாகக் குற்றம் சாட்டப்பட்டது. சர்வதேச அளவில், அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஆதிக்கத்தை மாநாடு கண்டித்தது. வெனிசுலா, கியூபா மற்றும் ஈரான் போன்ற நாடுகளுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. சுற்றுச் சூழல் அழிவுக்கு முதலாளித்துவச் சுரண்டலும் ராணுவவாதமுமே காரணம் என்று கடுமை யாகக் குற்றம் சாட்டப்பட்டது. இஸ்ரேல் மற்றும் மேற்காசியப் பிராந்தியத் தில் அமைதி, சமத்துவம் மற்றும் சோசலிசத்திற் கான போராட்டத்தில் அரபு-யூத ஒற்றுமையை வலுப்படுத்துவதே தங்களது மிக முக்கியமான இலக்கு என்று மாநாடு ஒருமனதாக அறிவித்தது.
